பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வடநாட்டுத் திருப்பதிகள்

என்ற நூற்பாவால் குறிப்பிடுகின்றது. அன்று ஈன்ற கன்றின் உடம்பிலுள்ள வழுவை ஆதரித்து உண்னும் பசுவைப் போன்று அடியார்களுடைய குறைகளை இனியனவாகக் கொள்ளும் குணம் (வாத்சல்யம்) இந்த எம்பெருமானிடம் மிக்குப் பொலிகின்றது என்று காட்டுவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

கால வெள்ளத்தில் திருமலையின் .ெ ப ய ரு ம் திருவேங்கடமுடையானின் பெயரும் மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டன.

கண்ணனடி யிணை எமக்குக் காட்டும் வெற்பு:

கடுவினையர் இருவரையும் கடியும் வெற்பு: திண்ணமிது விடுஎன்னத் திகழும் வெற்பு

தெளிந்தபெருங் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு; புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்பு

பொன்னுலகின் போகமெலாம் புணர்க்கும் வெற்பு: விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு;

வேங்கடவெற்பு எனவழங்கும் வேத வெற்பே’ (கடியும்-ஒழிக்கும்; திண்ணம்-உறுதி; செறிந்தநிறைந்த புகல்-இருப்பிடம் பொன்.உலகு-பர்டி பதம்; புணர்க்கும்-அடைவிக்கும்) என்ற வேதாந்து தேசிகரின் பாடல் மலையின் பெயரை மக்கள் மனத்தில் ஆழப்பதித்து விட்டது.

ஆழ்வார் பெருமக்களாலும் இராமாநுசராலும் அவர் பின் வந்த ஆசாரியப் பெருமக்களாலும் திருவேங் கடம்-நெடியோன் குன்றம்-பெரும்புகழ் பெற்றதைக் கண்டோம். இதனால் கற்றவர்கள், கல்லாதவர்கள், பக்தர்கள், சுற்றுலாக் செல்வோர் முதலிய எண்ணற்ற மக்கள் நாடோறும் திருமலைக்கு வருவதும் போவதுமாக உ ள் ள ன ர். திருவேங்கடமுடையான்மீது-வேங்கட

48. தேசி. பிரபந் - 82