பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கவே.ழ் குன்றுடை ஈசன்

என்பது பூர்வசன பூஷண சூத்திரம். நியமம் என்பது வரை யறை. தேச நியமமாவது, துயவிடங்களில் செய்ய வேண்டும், மற்றைய விடங்களில் செய்யலாகாதென்பது. கால நியமமாவது, வேனிற்காலம் முதலான காலங் களிலே செய்ய வேண்டும், மற்றைய காலங்களிலே செய்ய லாகாது என்பது. பிரகார நியமமாவது, நீராடல் கால் கழுவுதல் என்பன முதலானவற்றை முன்னாகக் கொண்டு செய்ய வேண்டும். வேறுவகையில் செய்யவொண்ணாது என்பது. அதிகாரி நியமமாவது, முதல் மூன்று வருணத் தவிர்கள் அல்லாதவர்களாக இருக்கலாகாது என்பது. பல (பயன்) நியமமாவது, இம்மை மறுமைப் பலன்களில் இன்ன பலத்திற்கு இது சாதனம், மற்றைய பலன் களுக்கு இது சாதனம் அன்று என்பது.

‘கியமமே உள்ளது shlsytu‘‘

என்று கூறிய பிள்ளை உலக ஆசிரியர் குணபூர்த்தியுள்ள விடமே விஷயமாகை’ என்று விளக்குவர். விஷய நியமம் என்பது இன்ன விஷயத்திலே செய்ய வேண்டும் என்ற நியமமே இந்தப் பிரபத்திக்கு உள்ளது’ என்றபடி, ‘குண பூர்த்தியுள்ள இடமே விஷயமாகை என்பது பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளிலும் செளல்ப்பியம் முதலிய குணங்கள் நிறைந்துள்ள இடமே விஷயமாகை என்றபடி.

“இங்குச் சொன்ன செளலப்பியத்திற்கு எல்லை நிலம்

அர்ச்சாவதாரம்

என்பது முமுட்சுப்படி. இதனை விளக்கும் முறையில் பொய்கையாழ்வாரும் ‘தமருகந்தது எவ்வுருவம் அவ்வுரு வம் தானே’ என்று மொழிவர்.

3. பூர் வச. பூஷ-25 5. முமுட்சு-189 4. ஸ்ரீவச. பூஷ-37 6. முதல் திருவந்-14