பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வடநாட்டுத் திருப்பதிகள்

இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்டவண் ணம் சிங்கவேழ் குன்றம் திருத்தலப் பயணத்தை மேற். கொள்ளுகின்றோம். நம் அருமை நண்பர் டாக்டர் வரதாச்சாரியாரின் திருக்குமாரன் நாராயணனும் உடன் வருகின்றான். சிங்கவேழ் குன்றம் என்ற இத்திருத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சென்னை-பம்பாய் இருப் பூர்திப் பாதையிலுள்ள கடப்பையிலிருந்து பேருந்து வசதி யுண்டு; நந்தியால், கர்நூல் என்ற இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. கடப்பையிலிருந்து ஆர்ல கட்டா வரையில் பேருந்தில் போகவேண்டும்; அங்கிருந்து சற்றேறக் குறைய 15கி.மீ. தொலைவிலுள்ளது.சிங்கவேழ் குன்றம். பேருந்து வசதி உண்டு; அடிக்கடி இல்லை. திருப்பதியிலிருந்து பேருந்து மூலமாகவே இத்திருத் தலத்தை வந்தடைகின்றோம். ஆர்லகட்டாவிலிருந்து பேருந்தில் வருங்கால் மலையருகில் வந்துவிடுகின்றோம். அச்சத்தை விளைவிக்கும் அடவி தென்படுகின்றது. சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய விலங்குகள் வாழும் இடம்போல் காட்சியளிக்கின்றது மலையிலுள்ள அடவி. முட்புதர்களும், முள் மரங்களும் நெருங்கிக் கிடக்கும் காட்சி எம்மருங்கும் காணப்படுகின்றது.

பேருந்தில் வந்து கொண்டிருக்கும் பொழுதே இத்திருத்தலத்தின் பெயரில் ஆழங்கால் படுகின்றோம். இத்திருப்பதி இப்பொழுது அகோபிலம்’ என்று வழங்கப் பெறுகின்றது. இது புராணப் புகழுடன் ஏற்பட்ட பெயர். வடநாட்டுத் திருப்பதிகளில் ஒன்று இது. ஆழ்வார் பாசுரத்தில் இது சிங்கவே.ழ் குன்றம் என்று குறிப்பிடப் பெறுகின்றது. சிங்கவேள் குன்றம் என்றும் வழக்குவது முண்டு. இப்படி வழங்கும்போது சிங்கம்-நரசிம்ம வடிவாய், வேள்-யாவராலும் விரும்பப்பெறுகின்ற கட்டழகுடையவரான பெருமான், குன்றம்-திருமலை எனப் பொருள்படும். சிங்கவே.ழ் குன்றம் என்னும்போது நரசிங்கப்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஏழு குன்றங்