பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கவே.ழ் குன்றுடை ஈசன் 35.

களையுடைய தலம் எனப் பொருள்படும். ஸ்ரீபர்வதம் அல்லது நல்ல மலைத்தொடரில்தான் இக்குன்றம் அமைந்: துள்ளது. தொடரின் தலைப்பகுதியே ஏழுமலையான் திருக்கோயில் கொண்டுள்ள திருமலை; உடற்பகுதி அகோபிலம்; வால்(கால்) பகுதி ஸ்ரீசைலம் என்ற திருத்தலம்.

சிங்கவேள் குன்றம் கருடாத்திரி, வேதாத்திரி, வீர rேத்திரம், அகோபலம், அகோபிலம் என்ற திருப்பெயர் களாலும் வழங்கப்பெறுகின்றது. பிறப்பிலேயே விஷ்ணு சித்தனாகப் பிறந்த கருடன் பல்லாண்டுகள் பரமபத. நாதனை நோக்கித் தவம் செய்து தனக்கு கருடவாகனன். என்ற பெயர் வழங்கவேண்டும் என்றும், தான் தவம் புரிந்த மலை கருடாத்திரி (அத்திரி-மலை) என்ற பெயர் பெறவேண்டும் என்றும் இரண்டு வரங்களைப் பெற்ற தால் கருடாத்திரி என்ற பெயர் பெற்றது. சோமகன் என்ற ஓர் அசுரன் நான்முகனிடமிருந்து நான்கு மறை களையும் அபகரித்துச் சென்றா ன் . திருமால் அவ்வசுரனைக் கொன்று மறைகளை மீட்டார். பின்னர் நான்மறைகளும் இந்த மலையில் நீண்ட காலம் திருமாலை நோக்கித் தலம் புரிந்து தமக்கு ஒருகாலத்திலும் ஒருவராலும் ஒருவிதத்திலும் ஆபத்து நேரிடாது என்ற வரத்தைப் பெற்ற்ன. இனி இத்திருமலையும் ‘வேதாத்திரி” என்ற பெயரால் வழ்ங்கப்பெறும் என்ற வரத்தையும் ஈந்தார். எம்பெருமான் துணில் நரசிங்கமாக அவதரித்து அப்பொன் பெயரோன் மார்பினைத் தம் வள்ளுகிரால் வகிர்ந்து தம் i ர த் தி னை வெளிப்படுத்தினதால் விரrேத்திரம் என்றும், அகோபிலம் என்றும் தாமே உகந்து இப்பெயர்களை இடுகின்றார். அகோபிலம் என்பது புராணப் புகழால் ஏற்பட்ட பெயராகும்.

மலை அடிவாரம் கீழ் அகோபிலம்’ என்றும், அடிவாரத்திலிருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர்