பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வடநாட் டுத் திருப்பதிகள்

தொலைவிலும் கடல் ம ட் டத் தி ற்கு 3000அடி உயரத்திலும் உள்ள மலை உச்சிப்பகுதி மேல் அகோபிலம்’ என்றும் வழங்கப் பெறுகின்றன. கீழ் அகோபிலத்தினருகில் எந்தச் சிற்றுாரும் இல்லை. திருத்தலப் பயணிகட்குப் பால், தயிர், மோர் முதலியன வழங்குவதற்காக ஒரு சில மலைவாசிகள் அடிவாரத்தி லுள்ள திருக்கோயிலின் வெளிப்பகுதிகளில் தங்கி யுள்ளனர். சில ஆண்டுகளாக திருமலை - திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள பல அறைகளுடன் கூடிய விடுதி வசதி திருத்தலப் பயணிகட்குக் கிடைக்கின்றது. ந்ல்ல வசதிகளுடன் கூடிய உணவு விடுதிகள் இல்லை. திருப்பதி நண்பர் திரு தி. கி. கோபாலசாமி அய்யங்கார் முன்னதாகக் கடிதம் எழுதியதால் நாம் தங்குவதற்குத் திருக்கோயில் மேலாளர் திரு. இலக்குமிநரசிம்மன் தம் வீட்டிலேயே வசதிகள் செய்து தருகின்றார். மேல் அகோபிலத்திற்குச் செல்வதற்கு அவர்ே மாட்டு வண்டி ஒன்றினையும் அமர்த் தி த் தருவதுடன் மல்ைமேல் பகலுணவுக்கு பிரசாதவகைகளை வழங்கவும் ஏற்பாடு செய்துவிடுகின்றார்: அர்ச்சகர், நாராயணன், நான் ஆகிய மூவரும் காலைச் சிற்றுண்டிக்குப் பினனர் புறப்படு கின்றோம் மலையை நோக்கி.

வண்டியில் போகும் போதே இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ள திருமங்கையாழ்வாரின் திருப்பாசுரங்களில் ஆழங்கால் படுகின்றோம். சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூன்றும் வைணவ சமய தத்துவங்கள். சித்து என்பது உயிர், அசித்து மக்கள், விலங்கு முதலியவற்றின் உடம்பு முதலிய உலகப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் காரணமான பிரகிருதி, இதனை மூலப்பகுதி என்றும் வழங்குவர். ஈசுவரன், இறைவன். இவை மூன்றும் தனித்தனி இயல்புடைய வேறு வேறு பொருள்கள்; என்றும் அழிவில்லாதவை. ஆயினும் எக்காலத்தும் இவை மூன்றும் சேர்ந்தே உள்ளன.