பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கவேழ் குன்றுடை ஈசன் 27

ஆழ்வாரின் ஒவ்வொரு பாசுரத்திலும் இம்மூன்று

தத்துவங்களும் நன்கு பொருந்தி அமைந்திருப்பதனைக் காணலாம்.

‘அங்கண்ஞாலம் அஞ்ச அங்கு

ஓர்ஆள்அரியாய் அவுணன் பொங்கஆகம் வள்உகிரால்

போழ்ந்த புனிதன் இடம்: பைங்கண்ஆனைக் கொண்டு

பத்திமையால் அடிக்கீழ் செங்கண் ஆளி இட்டுஇறைஞ்சும் சிங்கவேழ் குன்றமே’ (ஞாலம்-பூமி: அரி-சிங்கம்; அவுணன்-அரக்கன் உகிர்-நகம்; ஆளி-சிங்க்ம்} என்பது பாசுரம். ஆழ்வார் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும் முன்னடிகளில் நரசிம்மாவதார வரலாறும், பின்னடிகளில் சிங்கவே.ழ் குன்றத்தின் நிலைமையும் வருணிக்கப்பெற்று வைணவ தத்துவங்கள் குழைந்து பெய்யப் பெற்றிருப் பதைக் கண்டு மகிழலாம்.

முதலில் ஆழ்வார் காட்டும் மலையின் சூழலில் ஆழங்கால் படுவோம். அடர்ந்த காடுகள் தெருங்கி இருப்பது இத்திருமலை. ஆழ்வார் அச்சந்தரும் ஒரு நிலையைக் காட்டுகின்றார். நாம் வண்டியில் செல்லுங் கால் இத்தகைய ஒரு சூழ்நிலையைக் காண்த்தான் செய் கின்றோம். ‘வண்டின் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை, கொண்டல்மீது அணவும் சோலை, குயிலினம் கூவுஞ்சோலை’ என்று தொண்டரடிப் பொடிகள் காட்டும் அரங்கநகர்ச் சூழ்நிலை இங்கு இல்லை. பிறகு என்னதான் அங்கிருந்தது?

7. பெரி. திரு. 1. 1:1 8. திருமாலை-14