பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கவே.ழ் குன்றுடை ஈசன் 33

புறத்தில் மூன்று குகைகள் உள்ளன. நடுவிலுள்ள குகை யில் கற்பாறையில் குடைந்தெடுக்கப்பெற்ற திருக்கோயி லில் எழுந்தருளி யிருப்பவரே உக்கிர நரசிம்மர் (4): இருந்த திருக்கோலத்தில் கிழக்கே திரு மு. க ம ண் ட ல ம் கொண்டவர். இவரே இத்திருத்தலத்தின் நாயகர். தாயார் இலக்குமி நாச்சியார். இவர் இரணியனின் மார்பைத்தம் நகங்களால் கிழிக்கும் நிலையில் காட்டப் பெற்றுள்ளார். இவரைத்தான் ஆழ்வார் அவுணன், பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன்’ (1), கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த கூருகிராளன்’ (2), அவுணன் வாய்ந்த ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மான் (3), பொன்பெயரோன் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மான்’ (4), “அவுணன் பொன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன்” (5), எரிந்த பைங்கண் இலங்கு பேழ்வாய் எயிற்றோடு இது எவ்வுரு என்று, இரிந்து வானோர் கலங்கியோட இருந்த அம்மான் (6), மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆளரியாய் இருந்த அம்மான் (7) என்று’ மங்களா சாசனம் செய்துள்ளார். பாசுரங்கட்குக் குரல் கொடுத்து இவரைச் சேவிக்கின்றோம். இத்திருக் கோயிலுக்குக் கீழ்த் திசையில் சுமார் முக்கால் கிலோ மீட்டர் தொலை வில் கோயில் கொண்டிருப்பவர் வராக கரசிம்மர் (5); இவர் பூமிப்பிராட்டியைத் தம் மடியில் தாங்கிக்கொண்டு சேவை சாதிக்கின்றார். இங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் செங்குத்தான கண்டாத்திரி எனப் படும் குன்றில் கோயில் கொண்டிருப்பவர் பிரகலாத நரசிம்மர் (6); இவர் குகையொன்றில் இலக்குமி தம் மடியி லிருந்த வண்ணம் சாந்தமூர்த்தியாகக் காட்சி அளிக் கின்றார். இங்கிருந்த உற்சவமூர்த்தி ஆதிவண் சடகோப ரால் (மடத்தை நிறுவியவர்) அகோபில மடத்தில் வைக்கப்

23. பெரி. திரு. 1. 7:1-7.

3.3—3