பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அயோத்தி நகர்க் கோமான்

அயோத்தியை நினைக்கும்பொழுது அந்த நகர்க் கோமான் இராமனே நம் நினைவுக்கு வருகின்றான். நம்மாழ்வாரும்,

“கற்பார் இராமபிரானை அல்லால்

மற்றும் கற்பரோ?”

என்றல்லவோ கூறிப் போந்தார்? தசரத சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காட்டிற்குப்புறப்பட்ட இராமபிரானைத் தேரிலேற்றிக் கொண்டு போய்க் கங்கைக் கரையில் விட்டுத் திரும்பிய சுமந்திரன் சக்ரவர்த்தியிடம் சொல்லு கிறான்: ‘பெருமானே, உம்முடைய திருக்குமாரன் நாட்டைவிட்டுக் காட்டுக்குச் செல்லுகின்றானே என்ற துயரத்தினால் மரங்களெல்லாம் வாடியுலர்த்து போயின; நதிகள், குளங்கள், குட்டைகள் இவை யாவும் கரை யருகில் அடிவைக்க வொண்ணாதபடி கொதிப்படைத்தன; பொழில்கள் யா வும் இலையுலர்ந்து அழகழியப் பெற்றன’ என்கின்றான். இப்படி உயிரற்ற பொருள் களையும் விகாரப்படுத்திக்கொண்டு காட்டுக் கெழுத் தருளினவன் பதினான்கு யாண்டுகள் கழிந்து மீண்டும் திருவயோத்திக்கு எழுந்தருளுகையில், பொழில்கள் யாவும் செழிப்புற்றோங்கின என்கின்றார் வால்மீகி பகவான். இங்ஙனம் இராமபிரானின் குணப்பெருமை பேசப் பெறுகின்றது இராமாயணத்தில்.

1. திருவாய் - 7.5 : 1.