பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வடநாட்டுத் திருப்பதிகள்

இராமனது கதையைக் கூறுவது இராமாயணம். என்றாலும், இராமகாதை சிறையிருந்தவளின் பெருமை யைப் பரக்கப் பேசுகின்றது.

“இதிகாச சிரேஷ்டமான ரீராமாயணத்தால்

சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகின்றது’’’ என்பது பிள்ளை உலக ஆசிரியரின் திருவாக்கு. நம்மாழ் வர்ரின் தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள்’’’ என்ற திருவாய்மொழித் தொடரே இங்கனம் இவர் அருளிச் செ ய் த த ற் கு மூலம். பிராட்டியினுடைய பேரருளின் மிகுதியைத் தெளிவு படுத்துவதற்காகவே ‘பிராட்டி’ என்னாது சிறையிருந்தவள்’ என்று அருளிச் செய்கின்றார். தன் அடியவர்களான தேவமகளிரின் சிறையை விடுவிக்கும் பொருட்டுத் தன் அருளாலே, தேவதேவனுடைய பட்டத்துத் தேவியான தன்னுடைய பெருமையையும் பாராது, தானே வலியச் சிறைப் பட்டாள். குழவி கிணற்றினிலே விழுந்தால் உடன் குதித்தெழும் தாயைப்போலே, இவ்வுயிர்கள் விழுந்த பிறவிப் பெருங்கடலிலே தானும் ஒக்கவந்து பிறந்து இவர்கள் பட்டவற்றை எல்லாம் தானும் பட்டுக் காப்பாற்றுகையாலே, ஒரு காரணம்பற்றி வாராத தாயாகிற சம்பந்தத்தால் வந்த அளவற்ற அன்பு என்ற திருக்குணத்திற்கு இச்சிறையிருப்பு ஒரு விளக்கமாகும். திருவருள் புரிதலையே காரணமாகக் கொண்டதாகை யாலே இவளுக்குப் பேரொளியைத் தருகிறது. இச்சிறை யிருப்பு. அதுமனும் இவள் பெருமையை.

“விற்பெருங் தடங்தோள் வீர!

வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்த ளாய

கங்கையைக் கண்டேன் அல்லேன்;

2. ரீவச. பூஷ-5 (புருடோத்தம நாயுடு பதிப்பு) 3. திருவாய். 4. 8:5