பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவிந்தா!

என்கண்ணை மறந்துனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக் கொண்டு
நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவு கொண்டு
வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதல்
பாவமெலாம் மடிந்து நெஞ்சிற்
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா!
எனக்கமுதம் புகட்டு வாயே!”[1]

—பாரதியார்

  1. 1. பா. க. தோ. பா. கோவிந்தன் பாட்டு—3