பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

வடநாட்டுத் திருப்பதிகள்


பொறுப்பாளர் வினை தீர்த்தான் செட்டியார். இத்தொண்டர் நிலையத்திலிருந்து தோங்காவில் அயோத்தி யிலிருக்கும் நகர விடுதிக்கு நம்மை இட்டுச் செல்லுகின்றார். மாலை நேரமாதலின் எங்கும் வெளிச்செல்ல வில்லை. இரவு சிற்றுண்டி கொண்டு விடுதியில் துயில் கொள்ளுகின்றோம்.

அதிகாலையில் எழுந்து சரயு நதிக்கு நீராடச் செல்லுகின்றோம். விடுதியிலிருந்து நடந்து செல்லக்கூடிய தொலைவில்தான் உள்ளது இந்தப் பேராறு. இந்த ஆற்றைக் கண்டதும்,

சரயு என்பது தாய்முலை அன்னதிவ்
உரவு நீர்நிலத் தோங்கும் உயிர்க்கெலாம்

[1]

[உரவுநீர்-உலாவும் தன்மையுள்ள

என்ற கம்பன் வாக்கு நினைவிற்கு வருகின்றது. சிறு குழந்தைக்குத் தாய்முலை பயன்படுவதைப்போல் சரயு நதி பிராணிகட்குப் பயன்படுகிறது. தாயின் முலைப்பால் குழந்தையை வளர்த்தல் போல், சரயு தன் நீரை இவ்வுலகத்தாரை உண்பித்தும், உணவுப் பொருள்களை உண்டாக்கியும் வளர்க்கின்றது. இந்நதி கோதாவரியைப் போல் மிக அகன்றது. கங்கையைப்போல் இதன் நீரோட்டம் வேகமாக இல்லை; மிக மெதுவாகவே செல்கின்றது. இதில் நீராடுவோருக்கு யாதொரு ஆபத்தும் இல்லை. இதில் நீராடுவது மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நீராடிய பின்னர் விடுதிக்குத் திரும்புகின்றோம்.

அயோத்தி என்ற திருத்தலத்தைக் குலசேகராழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் என மூன்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

  1. 8. கம்ப. பால. ஆற்று-12