பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வடநாட்டுத் திருப்பதிகள்

இங்ஙனம் ஆழ்வார்கள் போற்றும் அயோத்தி நகர்க் கோமானின் திருக்கோயிலையும். பிற இடங்களையும் சுற்றிப்பார்க்க எண்ணுகின்றோம். மு. க் கி ய மா ன இடங்களைப் பார்ப்பதற்காக வாரணாசியிலிருந்து வந்த தொண்டர் ஒரு தோங்காவை அமர்த்தித் தருகின்றார். தோங்கா ஒரு மசூதியருகில் வருகின்றது. முகம்மதியர்கள் படையெடுப்பின் பொழுது பழைய திருக்கோயிலை இடித்து அவ்விடத்தில் இம்மசூதி எழுப்பப் பெற்றுள்ளதை அறிகின்றோம். மசூதியின் ஒரு பகுதி இராமன் பிறந்த இடம் எனக் காட்டப் பெறுகின்றது. அம்மி, ஆட்டுக்கல், மருந்தரைக்கும் கல்வம் போன்ற அடையாளங்கள் இங்கு வைக்கப் பெற்றுள்ளன. இவையெல்லாம் பிற்காலத்தில் முகம்மதியர் பழைய திருக்கோயிலை இடித்த பிறகு வைக்கப்பெற்றவை. இதுவே இன்று இராமசன்மபூமி பாபர் மசூதி என்ற பிரச்சினைக்குரிய இடமாகும். இந்து முஸ்லீம் மோதல் நேரிடாத வண்ணம் முன்னூருக்கு மேற்பட்ட போர் வீரர்கள் காவலுக்காக வைக்கப் பெற்றுள்ளார்.

இம்மசூதிக்கு அருகில் ச ர யு ந தி க் கரையில் தென்னிந்தியப் பாணியில் அம்மாஜி மந்திர்’ என்ற ஒரு புதிய கோயில் கட்டப்பெற்றுள்ளது. இங்கு இராமன், பிராட்டி, தம்பியர், சிறிய திருவடி சூழ மகுடம் சூட்டிய கோலத்தில் காட்சி அளிக்கின்றான், கோயில் மிகத் தூய்மையாகவைக்கப் பெற்றுள்ளது. மூர்த்தியின் கோலம் கைபுனைந்தியற்றிய வனப்பெலாம் திரண்டு அமைந் துள்ளது; கண்டாரை ஈர்க்க வல்ல பெற்றியுடன் திகழ் கின்றது. நாமும் இராமனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளோம் என்ற மனநிறைவைக் கொள்ளு கின்றோம்.

இவ்விடத்தில் திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அய்யங்காரின் திருப்பாசுரம் நினைவிற்கு வர அதனையும் ஓதி உளங்கரைகின்றோம்.