பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நைமிசாரணியத்து எங்தை

வைணவ சமயத்தில் எம்பெருமான் கருணை நிறைந்த திருவுள்ளத்தவன் என்று கருதப் பெறுகின்றான். ஆனால் ஆருயிர்களின் அளவு கடந்த குற்றங்கள் குளிர்ந்த நீரில் நெருப்புப் பிறத்தல்போன்று அவனுக்குச் சிற்றத்தை உண்டாக்குகின்றன. ஆனால் ‘அகலகில்லேன் இறையும்’ என்று இருக்கும் பெரிய பிராட்டியார் ஆருயிர்களின் தாயாதலால் எம்பெருமானுக்கு ஏற்ற பற்பல இனிய சொற்களைப் பகர்ந்து, அவன் சினத்தை மாற்றி அவனுக்குச் சீவர்களிடம் அருள் பிறக்குமாறு செய்வர். ஆதலின் பிராட்டியைப் ‘புருஷகார பூதை’ என்று கொள்வர்; அதாவது தகவுரை கூறுபவர் என்பதாகக் கொள்வர். ஆகவே, வைணவர்கள் ‘அகலகில்லேன் இறை யும் என்று அலர்மேல்மங்கை மார்பனையே சரணம் புகுவர்; அடைக்கலமாகக் கொள்வர். சீநிவாசனையேதிருவாழ் மார்பனையே-பிரபத்தி செய்வர். இதனை,

‘இவள் தாயாய், இவர்கள் க்லேசம் பொறுக்கமாட்டாதே. அவனுக்குப் பத்கியாய், இனிய விஷயமாக இருக்கை யாலே கண்ணழிவற்ற புருஷகாரம்.’ என்று முட்சுப்படி’ குறிப்பிடுகின்றது. நைமிசாரணி யத்தை நோக்கி இருப்பூர்தியில் பயணம் செய்யும் நம் மனத்தில் இந்த எண்ணங்கள் குமிழியிடுகின்றன.

இந்தத் திவ்விய தேசம் கிழக்கிந்திய இருப்பூர்திப் பாதையில் பலமு-சீதாபூர் கிளை பாதையில்-உள்ளது.

1. முமூட்சு - 128