பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நைமிசாரணியத்து எந்தை

47



நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவி லுன்ன இந்த ஊருக்கு மாட்டு லண்டியில்தான் செல்ல வேண்டும். வேறு ஊர்தி வசதிகள் இல்லை. இங்கு. எம்பெருமான் ஆர்னிய வடிவத்திலேயே சேவை சாதிக் கின்தான் என்று பெரியோர்கள் பணிப்பர். ஒரு காலத்தில் முனிவர்கள் நான்முகனை தோக்கித் தவம் செய்வதற்குச் சரியான இடம் இப் பூவுலகில் யாங்குளது?’ என்று தங்கட்குக் காட்டுமாறு வேண்டினர். அந் நான்முகனும் ஒரு தர்ப்பைப் புல்லைச் சக்கரம்போல் செய்து மண்ணு. லகில் உருண்டோடச் செய்து அது சென்று நின்ற இடமே. சிறந்தது என்று காட்டினதாகப் புராண வரலாறு. ஆகவே நைமிசம்’ எனப் பெயர் பெற்றது. நைமிசம்நேமி விழுந்த இடம், நேமி-சக்கரம்; ஆரணியம்-காடு எனவே, இத்திருத்தலம் நைமிசாரணியம்’ என்று: திருநாமம் பெற்றது.

ஹரிபிரபந்த இராமாநுசசாமி என்ற வடநாடடு வைணவ சமயத்தைச் சார்ந்த அந்தணர் ஒருவர் திருக்கோயிலை எழுப்பித் தென்னாட்டு முறைப்படி உற்ச வங்களை நடத்தி வருகின்றார். திருத்தலப் பயணிகட்கு. எல்லாவித வசதிகளும் இங்கு செய்யப்பெற்றுள்ளன. இங்கு இராமாதுச கூடம் என்ற பெயருடன் ஒரு மடம் உள்ளது. இங்கும் திருத்தலப் பயணிகட்கு எல்லாவித வசதிகளும் செய்யப்பெற்றுள்ளன. பெரும்பாலும் பதரிகாச்சிரமத்திற்குச் செல்லும் திருத்தலப் பயணிகள் திரும்பும்போது இத் திருத்தலத்திற்கு வருகின்றனர். இவர் கள் முதலில் சக்கர தீர்த்தத்திலும், பின்னர் அருகிலுள்ள கோமுகி நதியிலும் நீராடி அவற்றிற்கு முன்னருள்ள ஆரணியத்தை நோக்கிச் சேவிக்கின்றனர்.வியாசர்.இங்குத் தவம் செய்ததாக ஒரு புராண வரலாறு வழங்கி வருகின்றது. பழங்காலத்தில் இங்கு இருடிகள் கூடிய் புராணச் சொற்பொழிவுகள் செய்து வந்ததாக ஒரு வரலாறும் உண்டு.