பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நைமிசாரணியத்து எந்தை

49



குற்றங்களும் தம்மிடம் நிறைந்திருப்பனவாகச் சொல்விக் கொள்ளுகின்றார் ஆழ்வார்.

“வால்கிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள்
     மாதரார் வனமுலைப் பயனே
பேணினேன்; அதனைப் பிழை எனக் கருதி
      பேதையேன் பிறவிநோய் அறுப்பான்
ஏண் இலேன் இருந்தேன்; எண்ணினேன் எண்ணி
      இளையவர் கல்வியின் திறத்தை
நாணினேன்’’

(வால்நிலா-ஒளி பொருந்திய, நுதல்-நெற்றி; வனஅழகிய, பேணினேன் - ஆதரிந்திருந்தேன்; ஏண் இலேன்-எண்ணாதவனாக நர்ணினேன்-வெட்கித் துறந்தேன்.)

என்று சிந்திக்கத் தொடங்குகின்றார். ‘மாதர்களுடைய முறுவல் அழகையும், தோள் அழகையும், முலை அழகை யும் வாய் வெருவிக்கொண்டு நெடுநாள் வரையில் சபல னாய்த் திரிந்தேன். இந்நிலையில் சம்சார நோயைத் தீர்த் துக் கொள்வதற்கு வழி தேடாமல் இருந்துவிட்டேனே’ என்கின்றார். இந்த முறையில் அவர் சிந்தனை செல்கின் றது. மேலும், மாதர்களின் சிலம்பணிந்து செம்பஞ்சுச் சாறு பூசிய கால் அழகிலும், மைதீட்டிய கண்ணழகிலும் தோற்று, அறத்தையே மறந்தேன்; பாவங்களைச் செய்து, பணத்தைத் திரட்டிப் புலன்கள் புசித்துக் களிக்கும்படி யான தீய செயல்களை அதுபவித்துப் பழுதே பலபகலும் போக்கினேன். (2): முதலில் சூதாட்டம் ஆடத் துவங் கினேன். பகல் காலம் முழுவதும் அதில் கழியும். ஏராள மான பொருள்கள் கிடைக்கும். பெரும் செல்வனா, தலால் இப்படிப் பொருள்களை இழக்கின்றான் என்று

திெடு iெ

33-4