பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நைமிசாரணியத்து எந்தை 51

படுவதோர் கொடுயிறைக்கு அஞ்சி” (5) என்கின்றார் ஆழ்வார். பிறர் மனை நயப்பவர்களை யமபடர்கள் என்ன செய்வார்கள் என்பதை,

‘வம்புஉலாம் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர்பொருள் தாரம்என்று இவற்றை கம்பினார் இறந்தால் நமன்தமர் பற்றி எற்றிவைத்து எரினழு கின்ற செம்பினால் இயன்ற பாவையை, பாவி

தழுவு’ [வம்பு-மனம்: நம்பினார்-விரும்பினவர்கள்; எற்றி

துன்பப்படுத்தி; பாவையை-படிமத்தை)

என்று தம் கற்பனையில் சிந்திக்கின்றார். இதற்கு இன் சுவை மிக்க பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் சுவைக்கத் தக்கது; அவர்தாங்கள் (யமபடர்கள்) ஒரு கைக்கு ஆயிரம் பேராக வந்து பற்றுவார்களாய்த்து; பிறகு இவனுடம்பு தன்னோடே எற்றுவார்கள்: அதந்

தரம் தங்கள் கை சலித்தவாறே பொகட்டிவிட்டு வைப்

பார்கள்: இவர் இத்தனை போது ஸ்த்ரீகளை யொழிய இருக்க வல்லரோ! அவளை அழைப்பியும் என்பார்கள். இவனும், நம்மை நலிவதெல்லாம் நலிந்தார்களாகிலும் இனி அவர்களை அழைக்கிறார்களிறே’ என்று குறுவிழி கொண்டு கிடக்கும். எரியெழா நிற்பதாய் செம்பாலே செய்யப்பட்ட பாவையைப் பாவீ, தழுவு’ என்பார் களாய்த்து. கெடுவாய்! அவர்களொழிச்சினவன்றாகிலும் அநுதாபம் பிறந்து உகந்தருளினதொரு திருவாசலிலே ஒதுங்கினாயாகில் இன்று எங்களுக்குக் கைசவியா தொழியலாமே என்பர்களாய்த்து. அவர்கள் பண்ணும் நலிவைப் பொறுக்கலாம்; க்ரூரமான பேச்சாய்த்துப் பொறுக்கப் போகாதது.’

4. பெரி. திரு. 1.6:4