பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வடநாட்டுத் திருப்பதிகள்

(ஒர் அறிவு-சிறிது அறிவு; உய்யலாம்-ஈடேற லாம்; பிறர்-ப்ாகவத சம்பந்தம் பெறாதவர்; பேர்அறிவு- சிறப்பான ஞானம்; அரிது - ஈடேறுதல் முடியாது; அடியார்-பாகவதர், இம்மி-மிகச் சிறிய அளவு)

வீடு பேற்றுக்கு அறிவு முக்கிய காரணம் அன்று; பாகவத சம்பந்தமே முக்கிய காரணமாகும் என்பது இதன் கருத் தாகும். இதன் பிறகு ஆரணியத்தை நோக்கிய நிலையில் இத் திருமொழிப் பாசுரங்கள் அனைத்தையும் ஒருங்கே ஓதி உளங்கரைகின்றோம். நைமிசாரணியத் தெந்தையை சிந்தையுள் வைத்துள்ள கலியனின் இப்பாமாலையை ஒது கின்றவர்கள்,

‘ஒதநீர் வையகம் ஆண்டு

வெண்குடைகீழ் உம்பராகுவர் தாமே"7 (ஒதம்-கடல், வையகம்-பூமி: உம்பர்-நித்திய

சூரிகள்)

என்ற பல சுருதிப் பாடற்பகுதியை நினைந்து பரிபூரண பிரம்மானந்தம் பெற்ற அநுபவத்துடன் நம்மிருப்பிடத் திற்குத் திரும்புகின்றோம்.

7. வி. திரு.16.10.