பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சாளக்கிராமத்து அடிகள்

பகவத் விஷயத்தில் ஒர் இதிகாசம். வைணவ அடியார் ஒருவரிடம் இணைபிரியா நண்பர் ஒருவரைப் போல் தாம்பூலம் வைத்துக்கொள்ளும் பை ஒன்று இருந்து வந்தது. இதில் சாளக்கிராம வடிவத்தில் எம் பெருமானும் தங்கி இருந்தார். தமர் உகந்தது எவ்வுருவம் தானே... ஆம்’ என்று பொய்கையாழ்வார் அர்ச்சாவ தார செளலப்பியத்தை அருளிச் செய்துள்ளாரன்றோ? தமர்கள் கல்லையோ, மண்ணையோ உலோகங்களையோ எதை உருவமாக்கினாலும் அதனையே எம்பெருமான் தன் னுடைய ஒப்புயர்வற்ற திருமேனியாகப் பாவித்து அதில் சந்நிதானம் பண்ணி எழுந்தருளியிருப்பன் என்பது இதன் கருத்து. அடியார் தாம்பூலம் தரிக்கையில் சில சமயம் தற் செயலாகச் சிறிய கோலி போன்ற சாலிக்கிராம எம்பெரு மான் பாக்குகளுடன் கலந்திருப்பதால் அதனைப் பாக்கு என்று வாயில் இட்டுக் கொள்வதுமுண்டு. கல்போன்ற சாலிக்கிராம எம்பெருமான் வாயில் மசியாததால் தம் தவற்றை உணர்ந்து கொள்வார் அடியார். உடனே மிக்க பயபக்தியுடன் அந்த எம்பெருமானைத் தம் வாயினின்றும் அகற்றித் தம் கமண்டலத்திலுள்ள நீரைக் கொண்டு நீராட்டி தம் ஆடையால் துவட்டி, அதனைப் பட்டுத் துணியால் போர்த்தி, நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றை கைத்தாளம் கொண்டு பாடி பின்னர்த் தாம்பூலப் பெட்டியிலேயே அவரைக் கண்வளரச் செய் வார். இங்கனம் பல சமயம் இக் குழப்பம் நேரிடுவதுண்டு.

1. முதல் திருவத்.-44