பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாளக்கிராமத்து அடிகள் 57.

செளலப்பியக் குணத்தை விளக்குவதற்காக எடுத்துக் காட்டப் பெற்றது. -

சாலிக்கிராமம் 12 அல்லது 12க்கு மேல் கொண்டுள்ள இல்லத்தை திவ்விய தேசம் என்று போற்றப்பெறுத் என்பது வைணவ சம்பிரதாயம். இந்த இடத்திற்கு “ஸ்பர்ச தோஷம் என்றுமே இல்லை. ஸ்வயம் வியக்தத் தலங்களுள் சாளக்கிராமம் என்ற திருத்தலம் மிகவும் சிறந்தது. இங்கு எம்பெருமானின் நித்திய சாந்நித்தியம் இருப்பதாக ஐதிகம் என்று சொல்லப் பெறுகின்றது. ஆகவே, ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பகவதாரா தன்ம் நிறுத்தப்பெற்றால், பிற இடங்களைப்போல் இந்த இடத்திற்கு சம்புரோக்ட்சணம் செய்யத் தேவை இல்லை. ஒவ்வொரு திருக்கோயிலிலும் பகவதாராதனத்திற்காக சாலிக்கிராமங்கள் இருக்க வேண்டியது இன்றியமை யாதது. திருக்கோயிலைத் தவிர வேறு இடங்களிலும் சாலிக்கிராமங்களை வைத்து வழிபாடு செய்யலாம். சாதாரணமாக சாலிக்கிராமங்களை 2, 6, 8, 10, 12... என்ற இரட்டைப்படை எண்களில் இருக்குமாறு வைத்து. வழிபடுவதே வழக்கமாக இருந்து வருகின்றது. ஆனால், இரண்டு சாலிக்கிராமங்களை வைத்து வழிபடுதல் ஆகாது என்ற போதிலும் உண்மையான சாலிக்கிராமங் கள் கிடைப்பது அரிதாகையால், மேற்குறிப்பிட்ட எண் ணிைக்கையைத் தவிர வேறு எண்ணிக்கைகளில் அவை: இருப்பினும், அவற்றை வழிபடுவது குற்றமாகாது. என்றும் பெரியோர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

உண்மையான வைணவர்களின் இல்லத்தில் செப்புப் பாத்திரத்தில் நீரில் சாலிக்கிராமங்கள் வைக்கப்பெற்று வழிபாடுகள் நடைபெற்று வரும். இந்தப் பன்னிரண்டு எம்பெருமான்களும் கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விட்டுணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், சிரீதரன், இருடீகேசன், பற்பநாபன்,