பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வடநாட்டுத் திருப்பதிகள்

தாமோதரன் என்ற பன்னிரு திருநாமங்களைப் பெற்று இலங்குவர். குடும்பப் பாகப் பிரிவினையின்போது இந்த எம்பெருமான்களும் பிரிவதுண்டு. இந்த எம்பெருமான் களின் திருநாமங்களையே தம் மக்கட்கும் பெயராகச் சூட் டுவது வைணவர்களின் வழக்கமாகவும் இருந்து வருகின்றது.

சாளக்கிராமத் திருத்தலப் பயணத்தின்போது இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்டு எழுகின்றன. சாளக்கிராமம் நேபாளத்தில், காட்மாண்டு என்னும் தலைநகருக்கு 90 மைல் மேற்குத் திசையில் கண்டகி நதிக் கரையில் உள்ளது. முக்தி தாராயண rேத்திரத்திற்குப் போகும் வழியில் உள்ளது; இந்த rேத்திரம் பெருஞ் சாலைக்கு 100 மைல் தொலைவில் உள்ளது. குறுகிய மலையிடுக்குகளிலுள்ள ஒற்றையடிப் பாதை வழியாகத் தான் இத் திருத்தலத்தை அடைதல் வேண்டும். நெடுஞ் சாலைக்கு 10 மைல்கட்கு அப்பால் அங்கும் இங்குமாகப் பல சிற்றுார்கள் உள்ளன. இங்கும் அங்கும் சிறுத்தைப் புலிகள் நடமாடுகின்றன. இத் திருத்தலத்திற்குப் போகிற வர் நேபாள அரசிடம் இசைவு பெறுதல் வேண்டும். 50க்குக் குறைவான எண்ணிக்கையுள்ள திருத்தலப் பயணி கட்கு இசைவு வழங்கப்பெறமாட்டாது காட்மாண்டு நகரே இந்திய இருப்பூர்தி எல்லை நிலையமாகிய இரக்குலி லிருந்து 75 மைல் தொலைவில் உள்ளது. இரக்குவிலிருந்து அம்ப்லாக் கஞ்ச் வரையில் 25 மைல் தொலைவிற்கு நேரோ காஜ் நேபாள இருப்பூர்தி வசதி உள்ளது; இங்கிருந்து 25 மைல் லாரிகளில் சென்றாக வேண்டும். எஞ்சிய 25 மைல் தொலைவினை மலைப் பாதைகளில் ‘நடராஜா சர்வீஸில்தான் செல்ல வேண்டும். இத்தகைய போக்கு வசதிக் குறைவு திருத்தலப் பயணிகட்குப் பெருந் தடையாக உள்ளது. எனினும், மலையில் பனிக்கட்டி உருகத் தொடங்கிய பிறகே இந்திருத்தலப் பயணத்தைத்