பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாளக்கிராமத்து அடிகள் 59

தொடங்க வேண்டும். பட்டாளத்தில் தெரிந்த பெரிய அலுவலர்கள் இருந்தால் அவர்கள் உதவியால் சற்று எளிதாகப் பயணத்தை அமைத்துக் கொள்ளலாம்.

பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்திருத் தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். பல வட நாட்டுத் திருப்பதிகளின் பெயர்களைக் கூறும்போது சாளக்கிராமத்தையும் சுட்டுகின்றார் பெரியாழ்வார்.8 இளம்பிராயத்தில் கண்ணன் செய்த சிறு குறும்புகளைப் பட்டியல் இட்டுக் காட்டும்போது,

‘சாளக்கிராமம் உடைய நம்பி

சாய்த்துப் பருகிட்டுப் போக்துகின்றான்’ என்று ஒர் இடைப்பெண் கறந்து அடுப்பேற வைத் திருந்த பாலைத் திருவமுது செய்ததை எடுத்துக் காட்டு கின்றார் இந்த ஆழ்வார்.

திருமங்கையாழ்வார் ஒரு திருமொழியில் இத் திருத்

தலத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்து அநுபவிக்கின்றார். பாசுரங்கள்தோறும் இத் திருத்தலத் தின் சூழ்நிலையைக் காட் டுவதுடன் அங்கு எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானைப் பற்றியும் தெளிவாக எடுத்து ரைக்கின்றார் ஆழ்வார். இத் திருத்தலம் நீர் நிலங்களால் சூழப்பெற்று வனப்புடன் திகழ்வது (3); எங்கும் தடாகங் கள் நிறைந்திருப்பது (5); சந்தன மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்தது (8), தடாகங்கள் தோறும் உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடிபோல் உயர்ந்து காட்டும்'; சோலைகளில் வண்டுகள் களித்து இசைபாடும்; அருகிருக்கும் கழனிகளில் கயல் மீன்கள் நிறைந்து கிடக்கும்; இம்மீன்கள் துள்ளிப் பாய்ந்து தடாகங்களிலும் ஏனைய நீர் நிலைகளிலும் தாமரை

3. பெரியாழ். திரு. 4.7:9 5. பெரி. திரு. 1.5 4. பெரியாழ். திரு. 3.9:5 6. . 4.9:8