பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வடநாட்டுத் திருப்பதிகள்

கின்றனர். ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்று இடை விடாது அடிமை செய்யப் பாரித்திருக்கின்ற அடியார் திருக்கூட்டமும், பரமபதத்தில் பரத்துவத்தை அநுபவிப் பதைக் காட்டிலும் இங்குள்ள செளசீல்யம் செளலப்பியம் போன்ற எம்பெருமானின், திருக்குணங்களை அநுபவிப்ப தில் பேரவாக் கிளர்ந்து இங்கு வந்து திரண்டிருக்கும். நித்திய சூரிகளின் திரள்களும், சாதிச் செருக்கே இயல். பாகவுடைய பார்ப்பனக் கூட்டமும், ஒரு சேர நிற்பது. ega sec5solo ‘Lrrulam L-3 (Universal integration) sitl. நிற்கின்ற தன்றோ?

இந்தத் தலத்து எம்பெருமானின் திருநாமம் ஸ்ரீமூர்த்தி பெருமாள் என்பது; தாயார், ஸ்ரீதேவி! நாச்சியார். எம்பெருமான் நின்ற திருக்கோலத்தில் வடக்கே திருமுகமண்டலம் கொண்டு சேவை சாதிக் கின்றார். இவர் சந்நிதியில் இத்திருமொழிப் பாசுரங். களை மிடற்றொலியால் ஓதி உளங்கரைகின்றோம்; இறையதுபவமும் பெறுகின்றோம். இத்திருமொழியின் பலசுருதிப் பாசுரம் நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

‘சாளக்கிராமம் அடைநெஞ்சே!” என்று ஒரு தட வைக்கு ஒன்பது தடவையாக தம் நெஞ்சை ஆற்றுப் படுத்திய ஆழ்வார் நமக்கும் உபதேசம் செய்கின்றார்.

“தாரா.ஆரும் வயல்சூழ்ந்த

சாளக்கிராமத்து அடிகளை காரார்புறவின் மங்கைவேந்தன்

கலியன் ஒலிசெய் தமிழ்மாலை ஆர்.ஆர்.உலகத்து அறிவுடையார்

அமரர்கன் னாட்டு அரசு ஆளப் பேராயிரமும் ஓதுமின்கள்; -

அன்றிஇவையே பிதற்றுமின்ே.’

9. திருவாய் 3.3:1 10. பெரி திரு-1.5:10,