பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாளக்கிராமத்து அடிகள் ”

Iதாரா - ஒருவகைப் பறவை இனம்; கார் - மேகம்: புறவு - தோட்டம்; கலியன் - திருமங்கையாழ்வார்; ஒலி செய் - அருளிச்செய்த, அமரர் - நித்தியசூரிகள்! என்பது அவர்தம் உபதேசம். வைகுண்ட பதவியில் நாட்டமுள்ளவர்களை நோக்கி, ‘அறிவுடை மாந்தீர்! எம்பெருமானின் பேராயிரத்தை (சகஸ்ர நாமத்தை) ஒதுங்கள். முரட்டு சமஸ்கிருத மொழியிலுள்ள அவற்றை ஒத வல்லமை இல்லையேல் தேனினும் இனிய செந்தமிழில் அமைந்த இத்திருப் பாசுரங்களை ஒதுங்கள். இதனாலும் பேற்றிற்குக் குறை இல்லை’ என்கின்றார். ‘அன்றி யிவையே ஒதுமின்கள்’ என்னாமல் பிதற்றுமினே என் றருளிச் செய்தமை சிந்திக்கத் தக்கது. பாசுரங்களை வாயில் வந்தபடி தப்பும் தவறுமாகச் சொன்னாலும் பலன்கிட்டத் தடை இல்லை என்பது இதன் கருத்து. ‘சொல்லும் சிரமம் ஒழியச் சொன்னாலும் (திருமந்திரம்) தன் சொரூபம் கெடநில்லாது’ ‘ என்ற முமுட்சுப் படியின் வாக்கியம் ஈண்டு நினைவுகூறத் தக்கது.

இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரமும் நினைவுக்கு வர, அதனையும் ஓதி உளங்கரைகின்றோம்.

‘உண்டாம் முறைமை

உணர்ந்தடிமைப் பேர்பூண்டேன் பண்டாம் குடிகுலத்தால்

பன்மதத்தால்-கொண்டாட்டால் ஆளக் கிராமத்தால்

அல்லல்பேர் பூணாமல் சாளக் கிராமத்தார்

தாட்கு.’ 1உண்டாம் பொருத்திய முறைமை - சம்பந்தம்:

அடிமைப் பேர் - தாஸ்ய நாமம்; ஆள்ஆ உரிமை.

11. முமுட்சு-17 12. நிற். திருப். அந்-100