பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வடநாட்டுத்திருப்பதிகள்

கொண்டு வாழும்; அல்லல்-துன்பம்; பூனாமல்தரித்துக் கொள்ளாமல்; தாள்கள் - திருவடிகள்)

குடி, குலம், சமயம், தொழில் ஏற்றம், வாழ்ந்துவரும் ஊர் இவற்றின் சம்பந்தமாக வரும் பேர்கள் தன் முனைப் புக்கு இடனாகி அழிதற்கே உரியனவாதலோடு தாமும் நிலையாதனவாதலால், அவற்றை நல்லாசிரியனது உப தேசம் முதலியவற்றால் அறவே நீத்து ஆன்மாவிற்கு நிலைநின்ற பேராகிய வைணவதாசன் என்ற அடிமைப் பெயரைப் பூண்டு கொண்ட நல்லுணர்ச்சி பெற்றிருத் தலை வெளியிடுகின்றார் திவ்விய கவி.

இவ்விடத்தில் பூர்வசன பூஷணத்தின்,

‘அகங்காரமாகின்ற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்துமாவிற்கு அழியாத பேர் அடியான் என்றிறே,’’ “கிராம குலாதிகளால் வரும்பேர் அநர்த்த ஏது’**

(ஆர்ப்பு-அழுக்கு, துகள்; அநர்த்தம்-கேடு! ஏது

காரணம்)

என்ற வாக்கியங்கள் நினைவுகூரத் தக்கவை. குடிகுலம் முதலியவற்றால் வரும் பெயர்கள் உடலைப்பற்றி வருவன வாதலால் அவற்றிற்கும் ஆன்மாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லாது நின்று உடல் ஒழியும்போது அவை தாமும் அழியும்; ஆதலால் அவற்றால் ஆன்மாவிற்கு யாதொரு பயனும் விளையாது; அடிமைப் பெயரோ என்றும் உளதாகையால் அதனை உணர்ந்து பூண் டோர்க்கு எம்பெருமானின் பேரருள் கிட்டும் என்க. குடி யால் வரும் பெயர்களாவன: கந்தாடையார், பிரதிவாதி பயங்கரத்தார், சக்கரவர்த்தியார் என்றாற் போல்வன. குல த் தா ல் வரும் பெயர்களாவன: பிராமணன், வைசியன், என்றாற்போல்வன. சமயத்தால் வரும் பெயர்

13. பூர்வசன பூஷ. 78, 19