பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பதரிநாதன் - நரங்ாராயணன்

வைணவ சமயத்தின் மூலமந்திரமாக இருப்பது திருமந்திரம். தன்னை ஜபிக்கின்றவர்கட்கு இரட்சகமா யிருத்தலின் மந்திரம்’ என்ற திருநாமத்தைப் பெற்றது. முன் ஒரு காலத்தில் சமுசாரிகள் பகவானுக்கு அடிமைப் பட்டிருத்தலாகிய தங்கள் நிலையையும், தங்கட்கு ஒரு. காரணமுமின்றி ஆட்கொள்பவனாகிய பகவானுடைய தன்மையையும் மறந்தனர். இங்ஙனம் மறந்ததனால் ஈசுவரனுக்குத் தாங்கள் புரிய வேண்டிய அடிமைத் தொழி: லாகிய சிறந்த பலனையும் இழந்தனர். இந்த இழப்பைப் பற்றிய சிந்தனை சிறிதுமின்றி சமுசாரமாகிய பெருங் கடலில் விழுந்து ஆதியாத்மிகம் (தன் உடலையும் மனத் தையும் பற்றி வருவன), ஆதி பெளதிகம் (பேய், துட்ட விலங்குகள், மனிதர், இராக்கதர் முதலியவர்களால் ஏற்படுவன), ஆதி தைவிகம் (காற்று, மழை, வெயில், இடி முதலியவற்றால் நிகழ்வன) என்னும் மூவகைத் துன்பங்களால் உழன்று கொண்டிருந்தனர். இந். நிலையைக் காணப் பொறுக்கமுடியாத தாயும் தந்தையு மான எம்பெருமான் இச் சேதநர்கள் தங்களையும் (ஆன்ம சொரூபம்), தன்னையும் (பரமான்ம சொரூபம்) அறிந்து தானாகிய மரக்கலத்தைக் கொண்டு தங்கள் பிறவிப் பெருங்கடலைக் கடந்து வீடுபேறாகிய கரையை அடைவதற்கேற்ற அறிவைப் பெறும் பொருட்டுத் தானே சீடனும் ஆசாரியனுமாய் நின்று அநாதியானதும் அர்த்த: பஞ்சக ஞானத்தைச் சுருக்கமாகத் தெரிவிப்பதுமான திருமந்திரத்தைச் வெளியிட்டருளினான். சீடனுடைய