பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதரிநாதன்-நரதாராயணன்

இலக்கணங்களை உலகினர் நன்கு அறிந்து கொள்ளாமைன் யின் இவற்றைத் தன் செயல்களினால் (Learning br: doing) அறிவித்தற் பொருட்டே தான் சீடனாய் நின்றான்.

சத்திய யுகத்தில் பதரிகாச்ரமத்தில் தர்மதேவனுக்கும் தட்சப் பிரஜாபதியின் மகளாகிய மூர்த்தி தேவிக்கும், நரன், நாராயணன் என்ற பெயர்களுடன் விஷ்ணுவின் அவதாரங்களாகப் பிறந்தனர். பிறந்தவுடனே குழந்தைப் பருவம் நைமிசாரணியத்தில் முதலில் கழிந்தது; பின்னர் கந்தமாதன பருவதத்தில் தம் தவ வாழ்க்கையைத் தொடங் கினர். பின்னர் தேவர்கள், முனிவர்கள், மக்கள் இவர் கட்கு குருசிஷ்ட முறையை நன்கு விளக்கும் பொருட்டுப் பதரிகாச்ரமத்திற்கு வந்தனர். நாராயணன் நரனுக்குத் திருமந்திரத்தை உபதேசித்தருளினான். துவாபரயுகத்தில் இவர்களே கண்ணனாகவும் அர்ச்சுனனாகவும் பிறந்தனர்

இந்த வரலாற்று எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட நம் பதரிகாச்ரமத் திருத்தலப் பயணம் தொடங்குகின்றது. திருவதரி இமய மலையில் கடல் மட்டத்திற்கு 10380 அடி உயரத்தில் உள்ளது. ஹரித்து வாரத்திலிருந்து 202 மைல் தொலைவிலுள்ளது. அண்மையில் உத்திரப்பிரதேச அரசு வதரிவரை மலைச் சாலையை அமைந்துள்ளது. வதரி செல்லும் நாம் இருப் பூர்தி மூலம் வந்து ஹரித்துவாரத்தில் இறங்குகின்றோம். பேருந்து வசதியும் உண்டு. இது கடல் மட்டத்திற்குமேல் 924 அடி உயரத்தில் உள்ளது. ஹரித்துவாரம் ஒரு பெரிய ஊர். தங்குவதற்கு எல்லா வசதிகளையுமுடைய சத்திரங் கள் உள்ளன. அவற்றுள் ஒன்றில் தங்குகின்றோம். பின்னர் விஷ்ணு பாதம் எனப்படும் கங்கையின் படித் துறையில் நீராடுகின்றோம். பின்னர் திருக்கோயிலில் எம்பெருமான்களைச் சேவிக்கின்றோம். இந்த விஷ்ணு பாதம் பிரம்மகுண்டம் என்ற பெயராலும் வழங்கப் பெறுகின்றது. இங்கிருந்து கங்கை தெளிவான நீருடன்