பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வடநாட்டுத் திருப்பதிகள்

சமவெளிக்கு இறங்குகின்றது. இங்கு நாம் கங்கா தீர்த்தத் தைச் சிறிய செப்புப் பாத்திரத்தில் எடுத்து அடைத்துக் கொள்ளுகின்றோம்.

இங்கிருந்து 20 கி. மீ. தொலைவிலுள்ளது இருவி கேசம் என்ற திருத்தலம். இதுவும் கங்கைக் கரையில் தான் உள்ளது; கடல் மட்டத்திற்குமேல் 1116 அடி உயரத்திலுள்ளது. இங்கு, திரிவேணி முதலிய பல படித் துறைகள் உள்ளன. இங்குள்ள சத்திரம் ஒன்றில் தங்கி, தென்னாட்டு உணவு விடுதியொன்றில் உணவு கொள் கிறோம். திரிவேணியில் நீராடி இருவிகேசவரைத் சேவிக் கிறோம். சிவாநந்த ஆச்ரமம், பிர்லா குடும்பத்தினரால் நிறுவப் பெற்ற சீதாபவனம் என்ற இடங்களைச் சென்று காண்கின்றோம். இங்கிருந்து அரசுப் பேருந்துகள் திருவதரியை நோக்கிப் புறப்படுகின்றன. இவற்றுள் ஒன்றில் ஏறிக் கண்டம் கடிநகர் (தேவப் பிரயாகை), திருப் பிரிதி (ஜோஷி மடம்) ஆகிய திருத்தலங்களைச் சேவிக் கின்றோம். பின்னர் வதரிக்கு வருகின்றோம்.

வழியில் வதரியிலிருந்து 8 கி. மீ. தொலைவிலுள்ள அநுமன் சட்டி என்ற இடத்தைக் காண்கின்றோம். இது கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்திலுள்ளது. பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது இந்த இடத்தில் தான் வீமன் அதுமனைக் சந்தித்ததாகவும், இருவரும் போரிட்டுத் தம்தம் பலத்தைத் சோதித்துக் கொண்டதாக வும், இறுதியில் தாம் வாயுவின் மக்கள் என்று அறிந்து கொண்டதாகவும் வரலாறு.

அநுமன் சட்டியிலிருந்து மூன்று கி. மீ. பயணம் செய்தவுடன் திருவதரியின் திருக்காட்சியைக் காண்த் தொடங்குகின்றோம். இக்காட்சி கண்ணில் பட்டதும், பல்வேறு இடையூறுகட்குப் பிறகு,

1. தனித் காண்க.