பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதரிநாதன்-நரநாராயணன் 9

“பிண்டிஆர் மண்டை ஏந்தி

பிறர்மனை திரிதக் துண்ணும்

முண்டியான் சாபம் தீர்த்த

ஒருவன் ஊர்’’’

(பிண்டிஆர் - உளுத்த பொடிகள் உதிருகின்ற; பிறர் மனை - அயலார் வீடு; திரிதந்து - திரித்து; முண்டி யான் - மொட்டையாண்டியாகிய சிவன்) என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடும் வதரியை அடைந்த பேரின்பம் முகிழ்க்கத் தொடங்குகின்றது; மனமும் அமைதியடைகின்றது. திருக்கோவிலிலிருந்து 2 ஃபர்லாங் தொலைவில் பேருந்து நிலையம் உள்ளது: இஃது இருப்பது அழகாநந்தா நதிக்கரையில். இதன் அருகில் பல சத்திரங்கள், தங்கும் விடுதிகள், நீண்ட கடைத்தெரு ஆகியவை உள்ளன.

வதரியை அடைவதற்கு அரைமணி நேரத்திற்கு மூன் னதாகவே பருத்தியாடையை நீக்கிக் கம்பள ஆடையை உடுத்திக் கொள்ள வேண்டும். கோடைக் காலத்தில் ஒரு கம்பள மேலங்கி (Coat), கப்பளச் சால்வை, தடித்த கம்ளி இவை இருக்கவேண்டும். விடுதியொன்றில் தங்கு கின்றோம். திருக்கோயிலுக்கும் அழகாநந்தா நதிக்கும் இடையில் தப்த குண்டம்’ உள்ளது. நாள் முழுவதும் வெந்நீர் ஊற்றுகளிலிருந்து வரும் வெந்நீரால் அடிக்கடி இது நிரப்பப் பெறுகின்றது. இதில் நீராடியதும் நமக்கு ஒருவித புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. நர-நாராயணனின் சேவைக்குத் தயாராகிவிடுகின்றோம். இதனையடுத்து சில அடி தூரத்தில் உள்ள சிம்ம துவாரத் தைச் சேவித்த பிறகுதான் திருக்கோயிலுக்குப் போக வேண்டும்.

பதரி என்பது வடமொழியில் இலந்தை மரத்தின் பெயராகும். அம் மரங்கள் அடர்ந்து கிடக்கும் இடம்

2. திருக்குறுந்-19