பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதரி நாதன் - நரநாராயணன்

73


என்று எம்பெருமான் திருக்கோயில் கொண்டுள்ள இடம் வதரி என்பதையும் குறிப்பிடுகின்றார். எம்பெருமானை யும் வைப்பும் தங்கள் வாழ்வும் - ஆனான்12 என்றும், 'மைத்த சோதி எம்பெருமான் 3 என்றும், 'வாசம் மல்கும் தண் துழாயான்' 14 என்றும் போற்றிப் புகழ் கின்றார்.

வயோதிக பருவத்தை இவர் வருணிக்கும் திறம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் தன்மையது. உடலுக்குக் கிழத்தனம் வருங்கால் ஊன்றுகோல் அவசியமாகின்றது, முதுகு கூனிட்டுப்போகின்றது. தடியை ஊன்றிக் கொண் டும் நடக்கமுடியாத நிலை. விழுந்தும் எழுந்தும் பெரு மூச்சு விட்டுக்கொண்டும் சிரமநிலை (1); கிழத்தனத்தில் நாலடி நடந்தாலும் முதுகு நோகும்; முன்பக்கம் விழா மைக்காக தண்டூன்றிக் கொள்ள வேண்டிய நிலை. நடக்குங்கால் உடல் நடுங்கும்; கண்கள் சுழலும்; பெரிய ஒலியுடன் இருமலும் உண்டாகும் (2); இளமைப் பருவத் தில் மறைந்து கிடந்த நரம்புகள் முதுமையில் உடல் பசையற உலர்ந்தபடியால், உறிகள் போலே - நீண்ட கொத்துக் கொத்தாகக் கிளம்பித் தோன்றும்; தசையும் ஒடுங்கி மனமும் நலிவு படும்; இப்படிப்பட்ட நிலைமை யிலும் கம்புடன் புறப்பட்டு எங்காவது போகத் தோன் றும்; நெடிய வழியைப் பார்த்தவாறே கண்கள் சுழலும்; அடி பெயர்ந்து போகமாட்டாமல் நடுங்கி நிற்கும் நிலை (3); கண்கள் சுருங்கிப்போய் அவற்றினின்றும் பீளை பெருகவும் பித்தம் மேலிட்டுத் தலை சுற்றித் தள்ளம்பாறி நடக்கவும் இயல்பு (4); இளமையில் பாவையர் விரும்பும் - நிலையில் இருந்தமையும், அவர்தம் இதழமுதம் பருகி நின்றபடியையும், சிற்றின்பங்களில் ஆழங்கால்பட்ட

12. ஷை 1 , 316 13. 1, 3:7 14, 21, 3 : 8