பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதரிநாதன்-நரநாராயணன்

அமுதம் கொண்ட செய்தியும் (6) குறிப்பிடப் ப்ேற்: கின்றது.

நர-நாராயணன் எழுந்தருளியிருக்கும் ஆச்ரமத்தைப் பேசும் ஆழ்வார், பாசுரங்கள்தோறும் பொதுவாக ஆச்ரமம் இருக்கும் இடத்தைப் பற்றியும் அங்கு எழுந்தரு வளியிருக்கும் எம்பெருமான் பற்றியும் பேசுகின்றார். இந்த ஆச்ரமம் ஆகாயகங்கைக் கரையிலுள்ளது. தேவர்கள் கற்பகமலர்கள் கொண்டு வந்து சமர்ப்பித்து வணங்கும் இடம் (1); நான் முகனும் ஏனைய தேவர்களும் அடிக்கடி வந்து வழிபடும் இடம்(2); சூரியன் சுற்றி வரும் மேரு மலைவரை முட்டி அங்கிருந்து கங்கை நீர் இழிவதும் மாடமாளிகைகளின் உச்சியில் நாட்டப் பெற்ற தூண் களில் கட்டப் பெற்றுள்ள துணிகள் காற்றில் அசைந்தாடு வதுபோல் தோன்றுவதுமான இடம்(3), இங்குள்ள கங்கை நீரில் அப்சரஸ் மாதர்களின் சேலைகளும், மாலைகளும் திரட்டி வருவதுடன் பல்வேறு இரத்தினக் கற்களையும் உருட்டிக்கொண்டு வருவதைக் காணலாம் (4), இங்குத் தான் அண்டத்தைச் சுமக்கும் மேருமலையின் ஆச்சி பிலிருந்து கங்கை இழிகின்றது (5).

கபிலமுனிவரின் சாபத்தால் நீறாய்க் கிடந்த தம் முன்னோர்கள் (சகரபுத்திரர்கள்) தூய்மையடைவான் வேண்டி பகீரதன் தவம் புரிந்து கங்கையைக் கொணருங் கால், அது பெரிய தொருமலையைப் பிளந்து கொண்டு அங்குள்ள யானைகளைத் தள்ளிக்கொண்டு வருவதைக் காணக் கூடிய இடம்(6): ஒரு முகமாக வந்து இழிந்தால் பெருவிசையோடு வரும் மிடுக்கைக் கடல் பொறாதென்று கருதிய தேவர்களின் பிரார்த்தனைக் கிணங்க ‘அது'ப்ல முகமாகப் பெருகி வருவதைக் காணலாம் (7): இநீதிக் கங்கையின் வரலாற்றையே விசுவாமித்திர்ன் இரர்ழிலக்கு மணர்கட்கு சொல்லியதாகும் (8): ப்ரேதன்கே அவதரிப்பித்தபோது அது பிரம்மலோகத்தை ஊன்தித்துக் கொண்டு ஆகாயத்தினின்றும் இழிந்து அங்கிருத்து பூமி