பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்டம் கடிநகர் புருடோத்தமன்

இமய மலையில் உள்ள திவ்விய தேசங்களுள் முத லாவதாக நாம் சேவிப்பது இந்தத் திருத்தலமே. கண்டம்’ என்பதுவே இத்திருத்தலத்தின் திருநாமம். ‘கடி’ என்னும் சொல் சிறப்புப் பொருளது. கண்டம் கடிநகர் என்பது சிறந்த நகரமாகிய கண்டம் என்ற பொருளைத் தருகின் றது. இந்தத் திருத்தலப் பயணத்தை மேற்கொள்ளும் போது மூன்று வைணவ மந்திரங்களுள் முதலாவதாக இருக்கும் திருமந்திரத்தின் அரிய தாற்பரியத்தைச் சிந்திக் கின்றோம். ஓம் நமோ நாராயணாய என்பதே திருமத் திரம். இதில் ஒம், நம:, நாராயணாய என்ற மூன்று சொற் கள் அடங்கியுள்ளன. இவற்றுள் முதல் சொல்லாகிய ‘ஓம்’ என்பதைப் பிரணவம் என்பர். இதன் பொருளையே ‘நம:’, ‘நாராயணாய என்ற சொற்கள் விரிவுபடுத்து கின்றன. இந்த இரு சொற்களின் பொருளையே துவயம் என்ற இரண்டாவது மந்திரம் விரிக்கின்றது; இந்தத் துவயத்தின் பொருளையே மூன்றாவது மத்திரமாகிய சரமசுலோகம் விரிக்கின்றது. இதனால் திருமந்திரம் முதன் மையான மந்திரமாகத் திகழ்கின்றது. இது தன்னை உச்சரிப்பவர்கட்கு இரட்சகமாக இருத்தலின் மந்திரம் என்று பெயர் பெற்றது. இதனை அருகில் இருப்பவர் செவியிலும் விழாதபடி தனக்கு மட்டிலும் கேட்குமாறு உச்சரிக்க வேண்டும். இங்ஙனம் உச்சரிப்பதையே ஜபம் என்று வழங்குவர்.

திருமந்திரத்தின் முதற் சொல்லாகிய ஓம் என்பதில் அ, உ , ம என்று மூன்று எழுத்துகள் அடங்கி உள்ளன.