பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வடவேங்கடமும் திருவேங்கடமும் உறுப்பாகச் சிறுகக் கொள்ளும் கோயில் பாலாலயம் ஆகின்றது. திருமலை முதலிய திவ்விய தேசங்களும் அன்பர்களுடைய இதயமுமாகின்ற பெருங்கோயிலிற் சென்று சேர்ந்து வாழ்வதற்குப் பூர் வாங்கமாகவே, எம்பெருமான் திருப்பாற்கடலில் வாழ்வதாக ஆழ்வார் கள் அநுசந்திப்பார்களாதலால், அந்த அநுசந்தானத் திற்கு இணங்கத் திருப்பாற்கடலை இளங்கோயில் என்று சொல்லுதல் பொருத்தமுடைத்தல்லவா? பெருங்கோயிலிற் சென்று சேர்ந்த பிறகு இளங்கோயிலில் அன்பு இருக்கக் காரணம் இல்லாமையால், எம்பெருமானுக்கும் தமது திருவுள்ளமாகின்ற பெருங்கோயிலில் வாழ்வு அமைந்த பிறகு, இளங்கோயிலாகிய திருப்பாற்கடலில் அன்பு குறைந்துவிடும் என்றறிந்த ஆழ்வார், பிரானே, அவ் விளங்கோயில் நீ வைத்திருக்கும் அன்பினைக் குறைத்துக் கொள்ளலாகாது. என் உள்ளத்தில் வந்து சேர்வதற்கு அவ்விடம் பூர்வாங்கமாக இருந்ததனால், அதன்மீது அடியேன் நன்றி பாராட்டக் கடவேன். அதன் காரண மாகப் பிரார்த்திக்கின்றேன். அவ்விடத்தை நீ ஒருநாளும் கைவிடலாகாது’ என்கின்றார். இதனால், 'பனிக்கடல் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பி!' --பெரியாழ். திரு-5:4-9 (பள்ளிகோளை-பள்ளி கொள்ளலை) என்று பெரியாழ்வார் கூறுவதுபோல், திருப்பாற்கடலை யும் புறக்கணித்து விட்டுத் தம் இதயத்தில் வந்து சேரும் படியான பேரன்பு எம்பெருமானுக்கு விளைந்தமையைத் தெரிவிப்பதே பூதத்தாழ்வார் பாசுரத்தின் உட்பொருளா கும் என்பது ஈண்டு அறியத்தக்கது. இதனால் இளங்