பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நாலாயிரமும் திருவேங்கடமும்" காலாயிர திவ்வியப் பிரபந்தம் தென்னாட்டில் வைணவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் சிறந்த பக்திப் பனுவல், திருமால் திருவருளால் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருள் மிக்குப் பாடிய இன் தமிழ்ப் பாக்களைக் கொண்டது. இதனுள் திகழும் பாசுரங்கள் ஒவ்வொன்றும் செவிக்கினிய செஞ் சொல்லாலாயது; சொற்சுவை பொருட்சுவைகளில் சிறந்தது. பிறவித் துயரறுத்து அந்தமிழ்ப் பேரின்பத்தை அளிக்கவல்லது. இவ்வாற்றான் ஒவ்வொரு பாசுரமும் ஒவ்வொரு நூல் என்னத்தக்க மாட்சிமையுற்று காலாயிர திவ்வியப் பிரபந்தம்' என்று வழங்கலாயிற்று. இவ்வரிய நூல் ஆழ்வார் அருளிச்செயல் திவ்வியப் பிரபந்தம், பூகோசம் என்றும் வழங்கப்படும். இது மக்களின் கீழ் மையை அகற்றி மேன்மையளிக்கும் மறையாய் விளங்குத லின் இதனைத் தென்மொழி மறை என்பர் சான்றோர். வடமொழி மறையினும் இது சிறப்புடைய தென்பர். வட மொழி மறை பகவானுடைய அனந்த கல்யாண குணங் says, 'I (Auspicious qualities) GL&# Q.5m Lää gift குணங்களை முற்றிலும் சொல்ல முடியாமல் மீண்டது என்பர்; நம் தமிழ் மறையே உயர்வற உயர்நல முடைய வன்’ (திருவாய் 1, 1:1) என்று அப்பெருமானுடைய கல்

  • சப்தகிரி (மார்ச்சு-1988) யில் வெளி வந்தது.