பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரமும் திருவேங்கடமும் 7盘 யான குணங்களை முதலடியிலேயே பேசத் தொடங்கித் தெளிவாகக் கூறியுள்ளது. பக்திப் பனுவல் என்ற நூல் வகையில் இதனைப் போன்ற பெருமையுடைய நூல்கள்

  1. ఫి, ఫ్లషి థమ్స్లో, 翁 α .ே . g ડ & wo இலக்கிய உலகில் மிகச் சிலவற்றைத்தான் சொல்ல

முடியும். இந்தப் பக்திப் பனுவவில் பொய்கையாழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார் என்ற முதலாழ்வார்கள் மூவி ரும்; பெரியாழ்வாரும், அவர் அருமைத் திருமகள் ஆண்டா ளும்; குல சேகராழ்வார், திருமழிசையாழ்வார் , தொண் டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், மதுர கவி யாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோ ரும் ஆகிய பன்னிருவர் அருளிச் செய்த இருபத்து மூன்று பிரபந்தங்களும் திருவரங்கத் தமுதனார் இராமாநுசர்மீது பாடியருளிய இராமாநுச நூற்றந்தாதி என்ற ஒரு பிர பந்தமுமாக இருபத்து நான்கு பிரபந்தங்கள் அடங்கி யுள்ளன. ஆண்டாள் அரங்கநாதனுடன் ஐக்கியமான படியால் அவளையும், மாதவனைப் பாடாமல் மானிட ரைப் (நம்மாழ்வார்) பாடிய மதுர கவிகளையும் ஆழ்வார் களுடன் சேர்க்காமல் ஆழ்வார்களைப் பதின்மர் என்று பேசும் பூரீ வைணவ சம்பிரதாயமும் உண்டு. நெஞ்சை நோக்கிக் கூறும் பாடல் ஒன்றில் முத்தமிழ்க் கலி வீரராகவ முதலியார், ஆழ்வார்களைப் பதின்மார்' என்று கூறுவ தும், அவர்களின் அருளிச் செயல்களைப் பதின்மர் செக் தமிழ் என்று வழங்குவதும் இச்சம்பிரதாயத்தை நோக் கியே என்று கருதலாம். "பதின்மர்செந் தமிழைநீ படிக்கிலாய் கேளாய் படித்தபேர் தாளையும் பணியாய்' என்பது அவர் வாக்கு. திவ்வியப் பிரபந்தத்திலுள்ள பாசு ரங்கள் யாவும் 108 திவ்விய தேசங்களில் அர்ச்சாவதார AASAASAASAAMMS 1. திருவேங். கலம்-24