பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரமும் திருவேங்கடமும் 75 அ, இசைப் பாத் தொகுதிகள்: 1. முதலாயிரம்: இதில் அடங்கிய பிரபந்தங்களும் அவற்றிலடங்கிய பாசுரங்களின் தொகையும்: 1. பெரி யாழ்வார் திருமொழி 473; 2. திருப்பாவை 30; 3. நாச்சி யார் திருமொழி 143; 4. பெருமாள் திருமொழி 105; 5. திருச்சந்தவிருத்தம் 120, 6. திருமாலை 45; 7. திருப் பள்ளி எழுச்சி 10; 8. அமலனாதிபிரான் 10; 9. கண்ணி நுண் சிறுத்தாம்பு 11. ஆக, பிரபந்தங்கள் 9க்குப் பாசு ரங்கள் 947. இவற்றுள் பெரியாழ்வார் திருமொழியிலுள்ள திருப் பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கருதும் மரபும் உண்டு. எண்ணுள்ளது பெரியாழ்வாராலும், 2, 3 எண்களுள்ளவை ஆண்டாளாலும்; 4 எண்ணுள்ளது குலசேராழ்வாராலும்; 5 எண்ணுள்ளது திருமழிசைப் பிரானாலும், 6, 7 எண்ணுள்ளவை தொண்டரடிப் பொடிகளாலும்; 8 எண்ணுள்ளது திருப்பாணாழ்வா ராலும்; 9 எண்ணுள்ளது மதுரகவிகளாலும் அருளிச் செய்யப் பெற்றவை. 2. பெரிய திருமொழி: இதில் அடங்கிய பிரபந்தங் களும் பாசுரத் தொகையும்: 10. பெரிய திருமொழி 1084, 11. திருக்குறுந்தாண்டகம் 20; 12. திருநெடுந்தாண்டகம் 30. இம்மூன்று பிரபந்தங்களும் திருமங்கையாழ்வாரால் அருளிச் செய்யப்பெற்றவை; அடங்கிய பாசுரங்கள் 1134. 3. திருவாய் மொழி: இதில் அடங்கிய பிரபந்தமும் பாசுரத் தொகையும் 13. திருவாய்மொழி 1102, இப்பிர பந்தம் நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பெற்றதாகும். ஆ. இயற்பாத் தொகுதி: 4. இயற்பா : இதிலடங்கிய பிரபந்தங்களும் பாசுரத் தொகையும்: 14. முதல் திருவந்தாதி 100; 15. இரண்