பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 வடவேங்கடமும் திருவேங்கடமும் டாம் திருவந்தாதி 100: 18. மூன்றாம் திருவந்தாதி 100; 17. நான்முகன் திருவந்தாதி 96; 18. திருவிருத்தம் 100; 19. திருவாசிரியம் 7, 20. பெரிய திருவந்தாதி 87; 21. திருவெழுக்கூற்றிருக்கை 1, 22 சிறிய திருமடல் 1, 23. பெரிய திருமடல் 1, 24. இராம நுச நூற்றந்தாதி 108; ஆக, பிரபந்தங்கள் 11க்குப் பாசுரங்கள் 7.01. இவற்றுள் 14, 15, 16 எண்ணுள்ளவை முறையே பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகி யோராலும், 17 எண்ணுள்ளது திருமழிசைப்பிரானாலும், 18, 19, 20 எண்ணுள்ளவை நம்மாழ்வாராலும் 21, 22, 23 எ ண் ணு ள் ள ைவ திருமங்கையாழ்வாராலும்; 24 எண்ணுள்ளது திருவரங்கத்து அமுதனாராலும் அருளிச் செய்யப் பெற்றவையாகும். தொகுதிபற்றிய குறிப்பு: இவண் கூறப்பெற்ற முதலாயிரம், பெரிய திருவாய்மொழி, இயற்பா என்ற பாகுபாடும் பிரபந்தங்களின் அமைப்பு முறையும் நாத முனிகள் காலத்தில் ஏற்பட்டவையாகும். பிரபந்தங்களின் எண்ணிக்கை இத்தனை என்பது நாதமுனிகள் காலத்து வழங்கி வந்ததாகத் தெரியவில்லை. திருவரங்கத்தமுத னார் இராமாநுசர்மீது அருளியுள்ள இராமாநுச நூற் நந்தாதி இராமாநுசர் காலத்தில் இயற்பாத் தொகுதி யுடன் 24-ஆவது பிரபந்தமாகச் சேர்க்கப் பெற்றது. அக்காலத்திலிருந்து முதலாயிரத்திலுள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பைப் போலவே, இயற்பா இறுதியிலுள்ள 'இராமாநுச நூற்றந்தாதி எங்கணும் பெருவழக்காக ஒதப்பெற்று வருகின்றது. இன்றுள்ள திவ்வியப் பிரபந் தத்தின் பிரபந்தங்களின் தொகையும் பாசுரங்களின் தொகையும் வேதாந்த தேசிகர் காலத்தில் வரையறுத்துக் கூறப் பெற்றனவாகும். தேசிகர் திருப்பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கொள்ளவில்லை.