பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரமும் திருவேங்கடமும் 77 பிரடித்த வகைகள்: அந்தமிழால் தற்கலைகள் ஆய்ந்துரைத்த திவ்வியப் பிரபந்தங்கள் இருபத்து நான் கில் 1 முதற் குறிப்பால் பெயர் பெற்றவை அமலனாதி பிரான், கண்ணிதுன் சிறுத்தாம்பு ஆகிய (2) 2. அந்தாதித் தொடையாய் பெயர் பெற்றவை முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, பெரிய திருவந்தாதி ஆகிய (4). 3. முதற் குறிப்பாலும் அந்தாதித் தொடையாலும் பெயர் பெற்றது நான்முகன் திருவந் தாதி ( ). 4. பாடியவர்களால் பெயர் பெற்றவை பெரி யாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெரு மாள் திருமொழி ஆகிய (3). 5. அளவால் பெயர் பெற் றவை பெரிய திருமொழி, திருவெழுக் கூற்றிருக்கை (2}. 6. பாடியவர் பெயராலும் அந்தாதித் தொடையாலும் பெயர் பெற்றது இராமதுச நூற்றந்தாதி (1). 7. பாவால் பெயர் பெற்றவை திருவாசிரியம் திருச்சந்த விருத்தம் ஆகிய (2). 8. செயலால் பெயர் பெற்றவை திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி ஆகிய (2). 9. தன்மையால் பெயர் பெற்றவை திருவிருத்தம், திருக்குறுந்தாண்டகம், திரு நெடுந் தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருமாலை ஆகிய (6). 10. சிறப்பால் பெயர் பெற்றது திருவாய்மொழி (1). திருவேங்கடத்தின் மீது மங்களாசாசனம்: 188 திருப்பதிகளுள் கோயில், திருமலை, பெருமாள் கோயில் (காஞ்சி) என்ற மூன்றும் வைணவப் பெருமக்களால் மிகவும் சிறப்பாகப் போற்றப் பெறுவன நம்மாழ்வாரின் முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் திருவரங்கம் திருவெஃகா, திருவேங்கடம் என்ற மூன்று திருப்பதிகளின் பெயர்கள் மட்டிலும் வருவதால் (பாசுரம் 28, 26, 31) இவை இச் சிறப்புப் பெயர்கள் பெற்றனவாகப் பெரி யோர் பணிப்பர். இந்த மூன்று திவ்விய தேசங்களுள் திருமலை (திருவேங்கடம்) நடுநாயகமாகத் திகழ்வது;