பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவமயம் சிறப்புப் பாயிரமாலை டாக்டர் அர. சிங்காரவடிவேலன் எம். ஏ., பிஎச். டி., சி. ஜி. டி., தமிழ்ப் பேராசிரியர் - துறைத்தலைவர் துணை முதல்வர் - சேவுகன் அண்ணாமலை கல்லுர்ரி, தேவகோட்டை - 623 302 மானுடத்தின் வெற்றியென்றும் வாழ்க! வாழ்க! எப்போதும் ஏதேனும் எழுதிக் கொண்டும் எழுபத்தா றகவையிலும் படித்துக் கொண்டும் ஒப்பாய்வும் உறழாய்வும் செய்து கொண்டும் ஒருநூறு அடையும்வரை உழைத்துக் கொண்டும் மப்புடைய கார்முகில்போல் கருத்தைக் கொட்ட மடிதற்று முந்துகின்ற என்றன் ஆசான் சுப்புரெட்டி வாரென்று பெயர்சொன் னாலே சுறுசுறுப்பும் பேருழைப்பும் துள்ளு மாமே. அம்பதுக்கும் அறுபதுக்கும் இடைப்பட்டாண்டில் அழகப்பர் பண்ணையிலே தமிழை நட்டார்; நெம்புகோல் விஞ்ஞானம் கற்ற ஆசான் நெடுமாவின் திருவருளால் தமிழைச் சேர்த்தார்; அம்பலத்தில் ஆடாமல் அறைக்குள் ஆய்ந்தே அறிவுலகப் பல்துறையில் நூல்கள் யாத்தார்: சம்பளத்தை நம்பாமல் ரெட்டி யாரும் தம்பலத்தை நம்பியுயர் செட்டி யாரே.