பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேங்கடம் - மாலவனுக்கா? வேலவனுக்கா? 83

2. 'ஒடியா விழவின் நெடியோன் குன்றம்' (அகம்-149) என்ற அகநானூற்றுத் தொடரில் நெடியோன் குன்றம்' என்பதற்கு முருகன் மலை என்று பொருள் கொள்வதுபோல், சிலப்பதிகாரத்தில் வரும் நெடியோன் குன்றமும் என்ற தொடருக்கும் (வேனிற் காதை) பொருள் கொள்ள வேண்டும் என்பது. 3. சிலப்பதிகாரம் காடு காண்காதையில் 'வீங்கு நீரருவி வேங்கடம்' என்பது முதல் 'செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்' என்பது வரையுள்ள அடிகள் இடைக் செருகல் என்பதும், முருகக் கடவுட்கே வழங்கியிருந்த அடைமொழிகளைப் பிற்காலத்தில் யாரோ ஒருவர் திருமாலுக்குப் பொருத்த வேண்டிச் 'செங்கண் நெடி யோன்' எனச் சிறப்பித்தும் 'பகை வெண் ஆழியும் பால் வெண் சங்கமும்' என்று, இராமாநுசர் காலத்திற்கு முன்பில்லாத திருமாலடையாளங்களை இடையிற் புகுத்திப் போந்ததுவுமாகும் என்பது. 4. திருவேங்கடமுடையான் திருமேனியில் நாகா பரணமும் சடையும் உளளன என்பது எல்லார்க்கும் தெரிந்ததாதலால், இதுவே திருமாலுக்கு அங்கே சம்பந்தம் இல்லை என்பதற்குச் சான்று என்பது. இந்த நான்கு காரணங்களையும் தமிழ் இலக்கிய அடிப்படையில் ஆராய முற்படுகின்றேன். முதலாவது காரணம்: குறிஞ்சி நிலத்துக் கடவுள் முருகனே யாதலால் 'நெடியோன் குன்றம்’ என்று வேங்கடத்தை மாயோன் மலையாக இளங்கோ அடிகள் கூறியது நியாயம் ஆகாது என்று கூறும் வாதம் பொருத்த மற்றது. அதேகாதையில் பாண்டி நாட்டு அழகர் மலையையும் திருமாலிருஞ்சோலையையும் கூறியுள்ளார் அன்றோ? அம்மாதிரியே திருவேங்கடத்தையும் அவர் மாலவன்