பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

念叠 வடவேங்கடமும் திருவேங்கடமும் குன்றமாகக் கருதுவது பொருத்தந்தானே. தொல்காப்பி யர் ஒவ்வொரு கடவுளர்க்கும் நிலம் வகுத்திருப்பது உண்மையேயாயினும், மலைப்பகுதியில் திருமால் கோயில் கொள்வது உண்டென்றால் அது பிழை என்றும், அதனால் அத்திருமாலை மலைக்குரிய முருகனாக்கி விடுதல் தமிழ் நூல் முறை என்றும் துணிவதுதான் மிகவும் விநோதமான போக்காகும். எனவே, இப்போக்கினை ஏற்றுக் கொள்வோமாயின், ஆழ்வார் பெரு மக்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருமாலிருஞ்சோலை, திருக்குறுங்குடி, திருநீர்மலை, திருமெய்யம், சிங்கவேள் குன்றம் (அகோபிலம்) திருக்கடிகை (சோழ சிங்கபுரம், சோளிங்கர்), பதரிகாசிரமம் முதலான மலைப்பகுதியில் கோயில் கொண்டுள்ள திருமால்களை என்ன செய்வது? அன்றியும், வயல் (மருதல்) கடல் (நெய்தல்) நிலப்பகுதி களில் கோயில் கொண்ட திருமால், சிவபிரான், முருகன் முதலிய தெய்வங்களையும் அவ்விதமே நீக்கிவிட்டு, அவ் வந்நிலங்களுக்கு உரியவராகத் தொல்காப்பியத்தில் வரையறுக்கப் பெற்ற இந்திரனையும் வருணனையும் முறையே குடியேற்ற வேண்டியதும் இன்றியமையாத தாகிவிடும். இஃது அசம்பாவிதமான செயல்களன்றோ? முருகக் கடவுள் மலை (குறிஞ்சி}த் தெய்வமாதலால் திருவேங்கடமலைக்கும் அவர் பொதுவில் அதிதெய்வம் என்பதில் மறுப்பில்லை. ஆனால், அவருக்குரிய மலையில் வேறெத் தெய்வமும் சிறப்பாகக் கோயில் கொள்ளக் கூடாது என்று துணிவதே நூல் வழக்கோடும் உலகவியல் போடும் மாறுபடுவதாகும். திருவேங்கட புராணத்தில் கூறப்பெற்ற வாமன சரிதத்தில், சுப்பிரமணியர் தார காசுரனைக் கொன்ற தோஷம் போகும் பொருட்டுத் திருவேங்கடத் திருமாலைக் குறித்துத் தவம் செய்தார் என்று கூறப்பெற்றுள்ளது. ஒரு கடவுளுக்குரிய கோயிலில் வேறு கடவுளரைக் காப்பாளராகவும் (கேத்திர பாலக