பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வடவேங்கடமும் திருவேங்கடமும் இரண்டாவது காரணம்: அகநானூற்றுப் (அகம். 149) பாடல் அடியிலுள்ள நெடியோன்' என்ற சொல் முருகனைக் குறிப்பது உண்மையே யாயினும், இங்ங்னம் அருகிக் காணப்பெறும் வழக்கு திருமாலுக்குப் பெருகி வழங்கும் வழக்காக இருப்பது சிந்திக்கத் தக்கது. நெடி யோன் என்பது பொதுவாக உயர்ந்தோன் என்ற பொருளுடையது. இச்சொல் மற்றத் தெய்வங்கட்கும் வழங்கும் ஒரு பொதுச் சொல்லாகும். அங்ங்ணம் வழங்கும் போது அஃது அடையுடனாவது முன் தொடர்ச்சி பற்றி யாவது அவர்களுள் ஒருவரைக் குறிக்குமேயன்றித் தனித்து நின்ற நிலையில் அங்ங்ணம் அவர்களைக் குறிக்கும் ஆற்றலுடைய தன்று. முந்நீர் விழவின் நெடியோன் -புறம் 9 தேர்விசிருக்கை நெடியோன் -டிெ. 114 பொலந்தார் மார்பின் நெடியோன் -மதுரைக்காஞ்சி அடி 61 நிலந்தரு திருவின் நெடியோன். -சிலப். 28 அடி 4 என்று பாண்டியனையும் பாரி போன்ற அரசர்களையும் அடையுடன் நெடியோன்' என்ற சொல்லால் பண்டை நூல்கள் கூறுவதைக் காணலாம் அங்ங்னமே,முருகவேளும் “பல் பொறி மஞ்ஞை வெல்கொடியுயரிய, ஒடியா விழவின் நெடியோன் (அகம் 149) என்றும், சேவலங் கொடிய நெடியன் (பரிபாடல்) என விசேடத்துடனும், நெடி யோய் நின்குன்றின் மிசை (பரிபாடல்) என முன் தொடர்புபற்றியும் கூறுவது பண்டைய வழக்கே என்பது