பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் - மாலவனுக்கா? வேலவனுக்கா? 87 ஈண்டு அறியத் தக்கது. ஆனால், திருமாலைக் குறிக்கும் போது நெடியோன்' என்பது அக்கடவுட்குத் தமிழில் அநாதியாய் வழங்கும் மால்', 'மாயோன்' என்பவை போன்ற திருநாமமாய், நிலங்கடத்தற்கு நீண்ட திரிவிக் கிரமன் என்ற பொருள் குறிக்கும் பெயராகும். "நெடியோன் குறளுருவாகி' "நெடியோன் மார்பில் ஆரம்போல’ "நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி "நெடியோன் அன்ன நெடுங்கை’ -பெருங். 5.4:9 "நெடியவன் மூவகைப்படிவம்’ -டிெ. 2, 15:10 என்று அடைகளும் முன் தொடர்ச்சிகளும் இல்லாமல் தனித்து நின்றே திருமாலைக் குறிக்கும் ஆற்றலுடைய தாதலைக் காணலாம். திருவேங்கடமுடையானை நெடியோன்' என்ற பெயரால் இளங்கோவடிகள் கூறியது அப்பெருமானைத் திரிவிக்கிரமனாகக் குறிக்கும் ஆழ்வார் பெருமக்கள் வழக் குகட்கு மிகவும் ஒத்துள்ளதையும் காணலாம். நெடி யோனே வேங்கடவா (பெரு. திரு. 4:9) என்றார் குல சேகரப் பெருமாள். தாள் பரப்பி மண் தாவிய ஈசனை' (திருவாய் 3.3:11) என்று சிறப்பித்தார் சடகோபர். நச்சி னார்க்கினியரும் நிலங்கடந்த நெடிமுடியண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடு கடற்ற மலை (சிறப். பாயிரம் உரை) என்று திரிவிக்கிரமனாகவே திருமலை எம் பெருமானைக் கூறி மகிழ்வதைக் காணலாம். தொல்காப் பியப் பாயிரத்திலேயே உரையாசிரியர் திருவேங்கடத்தைத் திருமாலுக்கு உரிய தாக்கி விட்டார் என்பது கருதத் தக்கது. இவ்வாறு மாலும் குறளாய் வளர்ந்திரண்டு