பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii கட்டையுடல் கறுத்திருக்கும்; நூல்கள் மேய்ந்தே கண்ணிரண்டும் சிவந்திருக்கும்; ஆய்வு செய்தே பட்டையிட்ட திருநீறாய்ப் பழுத்த ஞானப் பழமான தலையில்முடி வெளுத்திருக்கும்; ஒட்டி வைத்தல் போலிருக்கும் உதட்டு மீசை உரைகாரர் தேன்மூழ்கி நரைத்திருக்கும் ரெட்டியார் தமிழ்ப்பரிசாய்க் கிடைத்ததற்கு ரெட்டிப்பாய் வேங்கடத்தை வணங்கு வோமே. அன்னைமொழி அவருக்குத் தெலுங்கென்றாலும் ஆதிமொழி தமிழ்தன்னில் மேதை யானார்; திண்ணைமொழி தேசமொழி உலகம் எங்கும் திகழுமொழி அனைத்தினிலும் தேர்ச்சி மிக்கார்; எண்ணம்மொழி செயல்யாவும் பெருமாள் என்றே இலக்கியத்தில் ஆழங்கால் படுவதாலே கன்னல்மொழி இனிப்பது போல் ரெட்டி யாரின் கையசையும் நூலாகி இனிக்கு தம்மா! வெறுத் தரையில் குப்புறத்தால் படுத்துக் கொள்வார்; விரித்தபடி பலநூல்கள் உடனி ருக்கும்; குறுந்தொகையும் நெடுந்தொகையும் அணியும் யாப்பும் கோள் நிலையும் வான் நிலையும் கூறும் நூலும் மருந்தியலும் உளவியலும் காதற் பாங்கும் மடைதிறந்த வெள்ளமெனத் தலையில் நின்று அருந்துகிற பாலாகிக் கையில் பாயும்; அத்தனையும் தேனாகி நூலாய் மாறும். ஆழ்வார்கள் பாசுரத்தில் மூழ்கி மூழ்கி ஆழங்கால் படுவதவர் பிறவிப் பேறு; வாழ்விக்கும் கருவிதரு விஞ்ஞானத்தில் வாய்த்திருக்கும் பேரறிவு கல்விப்பேறு;