பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9釜 வடவேங்கடமும் திருவேங்கடமும்

யுள்ளமை கருதத் தக்கது இதனால் அப்பெரியார் திருவுள்ளத்திலும் திருவேங்கடம் குறிஞ்சித் தெய்வமாகிய செவ்வேளுக்குரிய தாயினும், அது திருமாலின் புகழ் பெற்றத் திருக்கோயில்களில் ஒன்றாக இருப்பது தெளி வாகும். நான்காவது காரணம்: சீநிவாசக் கடவுளின் திரு மேனியில் நாகாபாரணமும் சடையும் உள்ளமையால் அத் திருமேனி திருமாற்கு உரியதன்று என்று கூறும் செல்வேள் கட்சியினர் அத்திருமேனி முருகனுக்கு உரியது என்பதை நிலைநாட்டத் தவறுகின்றனர். செவ்வேளுக்கு வக்காலத்து வாங்கிச் அதனைச் சிவபிரானுக்கு உரிய தாக்குகின்றனர். சிவபிரானின் சம்பந்தம் ஒரு பக்கப் பார்வையாவே உள்ளது. திருவேங்கடமுடையானின் திருமேனி சிவபிரானை. ஒருபாற் கொண்டதாக உள்ளது. இந்த அரிஅரன் உருவினையே பேயாழ்வார் "தாழ்சடையும் நீள் முடியும் (மூன். திருவந். 63) என்று சிறப்பித்தார். பொய்கை யாழ்வாரும் அரன் நாரணன் (முத. திரு. வந். 5), ஏற்றான் புள் ஊர்ந்தான் (டிெ 74), பொன் திகழும் மேனிப் புரிசடை அப்புண்ணியனும் (டிெ 88) என்ற மூன்று பாசுரங்களில் இவ்வடிவத்தைப் போற்றி னார். திருமங்கை மன்னனும், 'பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனைத்தன் உந்தியே தோற்றுவித்து’’ -பெரி. திரு. 3. 4:9 என்றும், "குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட தழல்நிற வண்ணன்' -பெரி. திரு. 3.4:9