பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் - மாலவனுக்கா? வேலவனுக்கா? 35 என்றும் கூறுவர். இந்த அரி-அரன் திருவுருவம் இன்றும் கூர்ந்து சேனிக்கத் தக்கதாக உள்ளது. இத்தகைய திருக் கோலத்தை இந்த எம்பெருமான் கொண்டிருந்ததால், அரியோ அரனோ என்ற வாதம் உண்டாக அதனை உடையவர் தீர்த்து வைத்தார் என்ற செய்தி முன்னர்’ விளக்கப்பட்டது. திருமலை சிவபிரானுக்குரிய தலமாகக் கருதப் பெற்றி ருப்பின் தேவாரம் முதலிய திருமுறைகள் இயற்றிய சிவன டியாகளுள் ஒருவரேனும் இம்மலை சிவனுக்குரியதாகப் பாடியிருப்பர். செவ்வேளின் படைவீடுகளைப் பற்றிப் பாடிய நக்கீரர் முதலிய சங்கத்தார் காலத்தேனும் முருகன் வரைப்பு என்று கொண்டாடியிருப்பர். இரண்டும் இல் லையாதலின், பண்டைக் காலத்திலேயே திருமலை சிவ பிரானுக்கேனும் முருகவேளுக்கேனும் சிறப்புடைய தலமா கக் கருதப்பட்டதன்று என்பது தெளிவாகின்றது. சோழ அரசர்கள் காலத்தில் திருமலையில் ஏற்பட்ட கல்வெட்டுகளிலும் பூரீ வைணவர்கள் இரட்சை இந் நிபந்தம் செய்தது து; வைணவர்களோம்" எனக் காணப்படுவதாலும் திருமலைக் கோவில் உடையவருக்கு முன்பே சிறிதும் ஐயமின்றித் திருமால் குன்றமாகவே கொள்ளப்பட்டிருந்தது என்று தெளிந்து கொள்ள முடி கின்றது. 9. கட்டுரை-4 பக். 61-65 காண்க