பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. முதலாழ்வார்கள் காட்டும் திருமலைக் காட்சிகள்" இக்காட்சிகளைக் காண்பதற்குமுன் இம்மூன்று பக்த மணிகளைப்பற்றி ஒரு சிறு குறிப்பு. ஒருவரை ஒரு வர் அறியாது ஒடித்திரியும் யோகிகளாக இருந்து வந்த இவர்களை எம்பெருமான் திருக்கோவலூரில் ஓர் இரவில் சந்திக்க வைத்த வரலாற்றை நாம் அறிவோம். நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப் பாயும் பனிமறுத்த பண்பாளா!-வாசல் கடைகழியா உள் புகா காமர்பூங் கோவல் இடைகழியே பற்றி இனி. -முத. திருவந். 68 |குன்று-கோவர்த்தனம்; பாயும் சொரியும்; பனிமழை, மறுத்த-தடுத்த வாசல் கடைவாசலுக்கு வெளியே; கழியா-வெளிப்பட்டுப் போகாமல்; உள் புகா-உள்ளே புகாமலும்; இடைகழி-நடுக் கட்டு). என்பது இந்நிகழ்ச்சிக்கு அகச் சான்றாக அமைகின் றது. பரபக்திக்குப் பொய்கையாழ்வாரும், பரஞானத்

  • சப்தகிரி (மார்ச்சு, 1986)யில் வெளிவந்தது.