பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாழ்வார்கள் காட்டும் திருமலைக் காட்சிகள் g? இற்குப் பூதத்தாழ்வாரும், பரமபக்திக்குப் பேயாழ் வாரும் எடுத்துக் காட்டுகளாகத் திகழ்கின்றனர் என்பது வைணவப் பெருமக்களின் கொள்கை. இந்த மூன்று நிலை களும் முத்தியிலே உண்டாகக் கூடியவையேயாயினும், மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கட்கு இருள் தருமா ஞாலத்தில் இருக்கும்போதே எம்பெருமான் திரு வருளால் விளைந்தன என்பதும் அவர்களின் நம்பிக்கை யாகும். இன்னொரு கருத்தும் ஈண்டு நினைவில் கொள்ளத் தக்கது. வைணவத் தத்துவம் சித்து, அசித்து, ஈசுவரன் என்று மூவகைப் பட்டிருக்கும். இதனைத் தத்துவத் திரயம் (திரயம்-மூன்று) என்று வழங்குவர் வைணவப் பெருமக்கள். சித்தும் அசித்தும் ஈசுவரனுக்கு உடலாக அமைந்திருக்கும். இந்த உறவினைச் சரீர-சரீரி பாவனை' என்று போற்றியுரைப்பர் அப்பெருமக்கள். அசித்தும் எம்பெருமான் படைப்பாதலால் அதுவும் வழிபாட்டிற் குரியது. சென்று சேர்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழி நம்வினை ஒயுமே. -திருவாய் 3.3:8 என்ற நம்மாழ்வாரின் கருத்திற்கு இஃது அரண் செய்வ தாக அமைகின்றது. அசித்தின் பெயரைச் சொன்னவுட னேயே எம்பெருமான் மனமகிழ்ந்து நமக்குத் திருவருள் பாலிக்கும் பெருமை பேசப்பெறுகின்றது. திருமா விருஞ்சோலை மலை என்றேன்; என்னத் திருமால் வந்துஎன் நெஞ்சுநிறையப் புகுந்தான். -திருவாய். 10.8:1 வ.தி.-7