பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ வடவேங்கடமும் திருவேங்கடமும் என்ற திருவாய்மொழி இதற்குச் சான்றாக நிற்கின்றது. எனவே, அசித்தாகிய வேங்கடமலையில் சில காட்சிகளைத் காண்டலும் இறையநுபவம் பெற்றதாக அமைகின்றது. இத்தகைய பல அழகிய காட்சிகளை முதலாழ்வார்கள் காட்டிச் செல்கின்றனர். அவற்றுள் சிலவற்றை ஈண்டுத் காண்போம். பொய்கையார் காட்டுபவை: ஒரு காட்சி இது. திருவேங்கடமலையில் வாழும் குறவர்கள் தங்கள் தினைப் புனங்களில் பட்டி மேயும் யானையைத் துரத்துவான் வேண்டிப் பரண்களில் இருந்தபடியே தங்கள் கையிலிருந்த மாணிக்கக் கட்டியை யானையின்மீது எறிகின்றனர். அப் போது அங்குத் திரியும் மலைப்பாம்புகள் யானைமீது கண்ட எறிந்த இர்த் தினத்தைக் கண்டு யானையை மேகமாகவும் இரத்தினத்தை மின்னலாகவும் எண்ணி மயங்குகின்றன; மின்னலுடன் இடி தோன்றும் என அஞ்சி அப்பாம்புகள் புற்றினுள் புகுந்து கொள்கின்றன. ஊரும் வரி அரவம் ஒண்குறவர் மால்யானை பேர எறிந்து பெருமனியைக் காருடைய மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர் எம்மென்னும் மாலது இடம். -முதல் திருவந். 38 (ஊரும்-திரியும்; வரி-கோடு, அரவம்-பாம்பு; ஒண்-அழகிய, மால்-பெரிய, மணி-மாணிக்கம்; க்ார்-மேகம்; எம்-எங்களுடையவன: மாலது.-- எம்பெருமானுடைய..! என்பது பொய்கையாழ்வார் சித்திரிக்கும் சொல்லோ வியம். மற்றொரு காட்சி இது: புனங்களில் பட்டிமேயும் யானையைத் துரத்தும் குறவர்கள் ஒரு கையில் அம்பு