பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாழ்வார்கள் காட்டும் திருமலைக் காட்சிகள் §§ தொடுக்கப்பெற்ற வில்லையும் மற்றொரு கையில் கொளுத்தின தீவட்டியையும் கொண்டு யானையை அதட்டிச் செல்லுகின்றனர். யானை வெருவி ஒடுங்கால் விண்ணினின்றும் விழும் மீன் தானாக அதன் வழியில் பேரொளியுடன் விழுவதைக் கண்டு அதனைக் குறவர் களின் கைத் தீவட்டி என்று மயங்கி மேல்செல்லாது அப்படியே திகைத்து நின்று விடுகின்றது. பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ வெ.ருவிப் புனந்துறந்த வேழம் இருவிசும்பில் மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலகார் கோன்வீழக் கண்டுகத்தான் குன்று. -முதல் திருவந். 40 [பகழி-அம்பு, செந்தி-திவட்டி; புனம்-கொல்லை; வேழம்-யானை, விசும்பு-ஆகாயம்; மேல்-ஒரு காலத்தில்; அசுரர் கோன்-இர்னியன்; உகந்தான். மகிழ்ந்தான்; குன்று-திருமலை). என்பது இந்த ஆழ்வாரின் சொல்லோவியம். பூதத்தார் காட்டுபவை: ஒரு காட்சி இது. திரு. மலையில் மதப் பெருக்கால் செருக்கித் திரிகின்றது ஒரு களிறு வழியில் அது தன் சிறந்த பிடியைக் காண்கின்றது. அதனை மிறி அப்பால் செல்லமாட்டாது அதற்கு இனிய உணவு ஈந்து அதன் மனம் நிறைவிக்க விரும்புகின்றது. அதன் முன் நின்று இரண்டே கணுக்களையுடைய மூங்கில் குருத்தொன்றைப் பிடுங்கி அருகில் ஒரு Lథ}) மூழைஞ்சினுள்ளிருக்கும் ஒரு தேனடையில் தோய்த்து அப்பிடியின் வாயில் ஊட்டுகின்றது. இதனை ஆழ்வார், பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்நின்று இருகண் இளமூங்கில் வாங்கி-அருகிருந்த தேன்கலந்து நீட்டும் திருவேங் கடங்கண்டீர் வான்கலந்த வண்ணன் வரை. -இரண். திருவந். 75