பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it? (? வடவேங்கடமும் திருவேங்கடமும் (வேழம் யானை, பிடி-பெண் யானை; இருகண். இரண்டு கணுக்களையுடைய, வண்ணன்-நிறத் தன்; வரை-மலை} என்று சொல்லோவியமாக்கிக் காட்டுவார். இத்தகைய ஒரு காட்சியைத் திருமங்கையாழ்வார் இமயமலையின் இரிட்சியாகக் காட்டுவார். திருப்பிரிதி என்ற திவ்விய தேசத்தை வருணிக்கும் இந்த ஆழ்வார் இக்காட்சியைக் காட்டுகின்றார். வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை அளை மிகு தேன்தோய்த்து பிரச வாரிதன் இளம்பிடிக் கருள்செய்யும் பிரிதிசென் றடைநெஞ்சே -பெரி. திரு. 1. 2.5 |வரை செய்-மலை போன்ற களிறு - ஆண் யானை, வெதிர்-மூங்கில், வளர் முளை-வளரும் இளமூங்கில், அளை முழஞ்சு: பிரசவாளி-தேன் வெள்ளம்; அருள் செயும்-கொடுக்கும்.) என்பது இக்காட்சியைச் சித்திரிக்கும் ஆழ்வாரின் சொல்லோவியம். இங்கு ஆண் யானை தன் பெண் யானைக்கு ஒரு தேன் தோய்ந்த மூங்கிற் குருத்தைத் தந்து அதனை மகிழ்விக்கின்றது. எம்பெருமான் பிராட்டியை உவப்பிக்கும்படியைக் கூறுதல் இதற்கு உள்ளுறைப் பொருள். எம்பெருமானார் திருமலைக் கெழுந்தருளித் துவயத்தின் பொருளைத் திருமந்திரத்தோடும் சரம சுலோகத்தோடும் உபந்யசித்த பொழுது அனந்தாழ்வான் இப்பாசுரத்தை உடையவர் பரமாக நிர்வகித்தருளினார். இந்தக் காட்சியை நினைவிற்கொண்ட கம்பநாடன், சித்திரகூட மலையில் இத்தகைய காட்சி யொன்றினைச் சீதைக்கு இராமன் வாயிலாகக் காட்டுவான்.